போர்ட்டர் (மூட்டைத் தூக்குவோர்) வேலைக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோடிக்-கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவோம் என்று கித்தாப்பு பேசிய கீதைப் பிரியர்களின் ஆட்சியில்,
மகாராட்டிர மாநிலத்தில் 5 (ஹாமல்) போர்ட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து 2424 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களில் 5 பேர் M.Phil பட்டதாரிகள் 9 பேர் P.G. பட்டதாரிகள், 109 பேர் (Diploma Holders) பட்டயம் பெற்றவர்கள். 253 பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் உள்ளனர் என்று மகாராஷ்டிரா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலர் இராஜேந்தர் மங்குல்கர் தெரிவித்துள்ளார்.
605 பேர் (HSC) 12ஆம் வகுப்பு தேறியோர். 282 பேர் (SSC) 10ஆம் வகுப்பு தேறியோர் 177 பேர் 10ஆம் வகுப்புக்குக் குறைவாகப் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிக்குத் தேவையான கல்வித்தகுதி 4ஆம் வகுப்பு தேறியவர்கள் இருந்தால் போதும் என்பதே.
அனைவருக்கும் வேளைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மத்திய அரசில் ஆட்சிபீடம் ஏறியவர்களின் கட்சிதான் இராஸ்தான் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவுக்கு எல்லை மீறி உள்ளது என்பதை மேற்குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்-பித்தவர்களின் நிலையிலிருந்து புரிந்துகொள்ளலாம் அல்லவா…
– ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, 21.1.2016
தகவல்: கெ.நாராயணசாமி