Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சுத்தமற்றதாம் ஆனால் புனிதமானதாம்!

“கங்கை நீர் மாசு அடைந்துள்ளது. எனவே, குடிப்பதற்கு உகந்ததல்ல’’ என்று கூறி அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் முன் சில அமைப்பினர் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அஞ்சல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புனித கங்கை நீர் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், பிற அஞ்சல் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கங்கோத்ரி, ரிஷிகேஷிலிருந்து கொண்டு வரும் கங்கை நீர் புனிதத்தன்மை பெற்றது.

இருப்பினும், பாட்டில்களிலேயே தெளிவாக குடிப்பதற்கு உகந்ததல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிப்பதற்கான வழிமுறைகள் இதில் மேற்கொள்ள-வில்லை. எனவே, குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டாம் என்றார். ஸீ