1. எவ்வளவு கால இடைவெளியில் ஒருவர் ரத்ததானம் செய்யலாம்?
அ) ஆண்டுக்கு ஒரு முறை
ஆ) மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை
இ) ஆறு வாரங்களுக்கு ஒரு முறை
ஈ) மூன்று – நான்கு மாதங்களுக்கு ஒரு முறை
2. ஒரு முறை ரத்ததானம் செய்தால், எவ்வளவு ரத்தம் எடுக்கப்படும்?
அ) 200 – 250 மி.லி
ஆ) 1 – 1.5 லிட்டர்
இ) 600 – 750 மி.லி
ஈ) 400 – 450 மி.லி
3. எந்த வயதிலும் ஒருவர் ரத்த தானம் செய்யலாமா?
அ) செய்யலாம்
ஆ) கூடாது
4. ரத்ததானம் செய்வதற்கு முந்தைய உணவு வேளையில் என்ன சாப்பிட வேண்டும்?
அ) வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்
ஆ) அளவாக, வழக்கமான உணவைச் சாப்பிடலாம்
இ) திரவ வகையிலான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்
ஈ) எதையுமே சாப்பிடக் கூடாது
5. ரத்ததானம் செய்யும்போது குத்தப்படும் ஊசியால் வலி அதிகமாக இருக்குமா?
அ) ஆம்
ஆ) இல்லை
6. யார் அதிக அளவில் ரத்ததானம் செய்கிறார்கள்?
அ) தன்னார்வலர்கள்
ஆ) பணம் பெற்றுக்கொண்டு ரத்த தானம் செய்பவர்கள்
7. ரத்ததானம் செய்த பின், மீண்டும் அதே அளவுக்கு ரத்தம் உடலுக்குள் உருவாக எவ்வளவு காலம் தேவைப்படும்?
அ) 6 மணி நேரம்
ஆ) 36 மணி நேரம்
இ) மூன்று நாட்கள்
ஈ) இரண்டு மாதங்கள்
8. ரத்ததானம் செய்வதால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அ) ஆம்
ஆ) இல்லை
விடை
8.ஆ 7.ஆ 6.அ 5.ஆ 4.ஆ.இ 3.ஆ 2.ஈ 1.ஈ