குழந்தை ஆணா? பெண்ணா? கடவுள் அளிப்பதா? இல்லை! இல்லை!

ஜூலை 01-15

நாம் விரும்பிய குழந்தையை பெற முடியும்!

குழந்தை ஆணா? பெண்ணா? இந்தியாவில் இது பெரும் சிக்கல். ஆண்தான் வேண்டும் என்ற ஒரு தவறான விருப்பு மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்டுவிட்டது. அதற்கு பெண்களின் பாதுகாப்பும், செலவும், பிறர் வீட்டுக்கு வாழச் செல்வதும் காரணமாகின்றன. ஆணாயினும் பெண்ணாயினும் நம் குழந்தை என்று ஏற்று மகிழ்வதே பெற்றோருக்கு அழகு. ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது அறியாமை மட்டுமல்ல. அநீதியும் ஆகும். பெண் என்று அறிந்ததும், கருவில் கலைத்தல், பிறந்த பின் கொல்லுதல் கொலைக்குற்றமாகும்!

ஆணாகப் பிறப்பதும் பெண்ணாகப் பிறப்பதும் இறைவன் விருப்பம். நம் கையில் இல்லை என்ற கருத்தும் பரப்பப்படுகிறது; நம்பப்படுகிறது. ஆனால், இது உண்மை அல்ல.

உடலுறவில் ஆணின் விந்து வெளிப்பட்டதும், அதிலுள்ள Y, X என்ற இரு அணுக்களும் பெண்ணின் கருப்பையிலுள்ள சினை முட்டையைச் சேர விரைந்து ஓடும். இதில் Y முதலில் சென்று சேர்ந்தால் ஆண் குழந்தையும், X முதலில் சென்று சேர்ந்தால் பெண் குழந்தையும் உருவாகும்.

தற்போது அறிவியல் கண்டுபிடிப்பால் நாம் விரும்பும் குழந்தையை பெறலாம். இதில் கடவுள் செயல் ஏதும் இல்லை. நம்ம ஆட்கள் இந்த வேலையைக் கூட கடவுளிடம் விட்டதுதான் வேதனையிலும் வேதனை!

1979க்கு முன்பே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் பொலார்டு என்ற விஞ்ஞானி செக்ஸ் செலக்ட்டர் கிட் கண்டுபிடித்தார்.

இதன்பணி Y, X அணுக்களின் வேகத்தை அதிகரிப்பதுதான்!

நமக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றால், Y அணுவின் ஓடும் வேகத்தைக் கூட்டி, அது கருமுட்டையை முதலில் அடையச் செய்தல் வேண்டும். பெண் குழந்தை வேண்டும் என்றால் X அணுவின் ஓடும் வேகத்தை அதிகரித்து கருமுட்டையை முதலில் அடையச் செய்தல் வேண்டும்.

மருத்துவர் ஆலோசனையின்படி செயல்பட்டால் விரும்பியபடி குழந்தை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *