தமிழில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ.., பி.எச்.சி
கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஓமர் எனும் கவிஞரின் கவிதைகளுக்கு அடிப்படையாக அமைந்தவை புராணக் கதைகளே. ஓமரின் கவிதைகளில் முழு வளர்ச்சி நிலையை அடைந்து அதன் பின்னர் வீழ்ச்சியடைந்துவிட்ட புராணக்கதைகளையும், வேதங்களில் வளர்க்கப்-பட்டுவந்த புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கும்போது இந்தியாவின் தொன்மைக்காலக் கவிதை-களுக்கும், தொன்மைக் காலக் கிரேக்க இலக்கியங்களுக்கும் மிக நீண்ட இடைவெளி இருப்பதை நாம் தெளிவாக உணர முடிகின்றது. வேதம் என்பது ஆரிய இனத்தவரின் உண்மையான இறைமரபுக் காவியம் (தெய்வப் பரம்பரைக் கவிதைகள்); கிரேக்க ‘ஈசியாட்’ என்பது மூலப் படிவங்களின் உருச்சிதைவிற்குள்ளான கேலிச் சித்திரங்கள். மனித மனம், ஒரு புனிதமான ஆற்றலைப் பற்றிய இயல்பான விழிப்பு நிலையில் இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத வகையில் வலிமையான மொழி ஆற்றலால், இயற்கைக்கு மாறான, புலனாகாத நுண்பொருட் கருத்துக்களால் இழுத்துச் செல்லப்படுவதை அறிய வேண்டு-மானால் நாம் வேதத்தைப் படிக்க வேண்டும்.
இந்துக்கள் எதை வழிபட்டுக் கொண்டிருக்-கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களுக்கு நாம் சொல்ல விரும்பினால் அவர்கள் வழிபட்டுக் கொண்டிருப்பவை, குறிப்பிடத்தக்க இயற்கை நிகழ்வுகளின் வெறும் பெயர்கள்தான்! அவை தெளிவற்றதோர் இருண்மை நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உயர்வுபடுத்தப்பட்டுப் படிப்படியாகத் தெய்வீக நிலைக்கு ஏற்றப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள அவர்கள் வேதத்தைப் படிக்குமாறு நாம் செய்ய வேண்டும்.
பண்டைக்-கால மதகுருமார்கள், மாற்றுமதக் கடவுளர்களை (புறச் சமயக் கடவுளரை)ப் பேய் பூதங்களாகக், ‘கெட்ட ஆவிகளாக’ எண்ணிப் பரப்பியது மிகப் பெரிய தவறாகும். இதே தவறை, இந்துக் கடவுளர்களைப் பற்றி நாமும் செய்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ‘இயாஸ், எமேரா, நிக்ஸ், அபேதா’ ஆகியோரைப் போலப் பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட கடவுளர்களாக இந்துக் கடவுளர்களைக் கருத இயலாது. அவர்கள் நடிகர்களில்லாத வெறும் முகமூடிகள்; அவர்கள் மனிதர்களின் படைப்புகள்; அவர்கள் மனிதர் களைப் படைத்தவர்களல்லர். அவர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே! தெய்வத்தன்மை சார்ந்தவர் களல்லர்! உயிர்கள் இல்லாத பெயர்கள்! பெயர்கள் இல்லாத உயிர்களுமல்ல!
இதே முறையில்தான் புராணக் கதைப் புனைவுகளின் தோற்றத்தைப் பற்றியும் வேதங்கள் விளக்குகின்றன. ஆன்மநேய அனைத்து இறைக் கோட்பாட்டின் (பலதெய் வழிபாடு) தோற்றம் பற்றியும் அவை நமக்குத் தெளிவாக விளக்குகின்றன. இக்கோட்-பாட்டினைப் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியுள்ளவாறு வேதங்கள் உறுதியாக _ ஆணித்தரமாக எதனையும் கூறவில்லை.
வேதங்களில் குறிப்பிடப்படுகின்ற தனிக் கடவுளர்களை வழிபடுவோர் அக்கடவுளர்களே தங்களுக்கு எல்லாமாகி இருப்பவர்கள் என்றும், கூட்டுக் கடவுளர்களின் வேலைகளையெல்லாம் அவர்களே செய்கிறார்கள் என்றும், அவர்களே அனைத்துப் பொருள்களின் மேலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றும் பேசப்படுகின்றனர். இந்தப் பூமியின் கடவுளச்சியாகிய ‘ஆதித்தி’ இவ்வாறு பேசப்படுகிறாள்:
“ஆதித்தி தான் சொர்க்கம்; ஆதித்தி தான் வான் மண்டலம்; ஆதித்தி தான் தந்தை, தாய், மகன் எல்லாம்; ஆதித்தி தான் ‘விஷ்வ தேவா’ (அனைத்துக் கடவுளரும் ஒன்று சேர்ந்தநிலை) ஆதித்தி மக்கள் அய்ந்தன் தொகுதி; ஆதித்தி _தலைமுறை; ஆதித்திதான் பிறப்பு’’
இவ்வாறு ரிக் வேதம் கூறுகிறது. இவ்வாறே இந்திரனும் கீழ்க்கண்டவாறு கூறுவதாக வேதம் கூறுகிறது:
“நானே மனுவாக இருந்தேன்; நானே சூரியனாக இருக்கிறேன்; அறிவிற் சிறந்த ரிஷியாகிய காக்ஷிவான் நான்தான்;’’ என்று இன்னும் பலவாறாக இந்திரன் பேசுகிறான்.
சூரியனாக இருந்த அவனை, இந்திரா, மித்ரா, வருணா, அக்னி, என்று அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். விண்ணுலகைச் சேர்ந்த வலிய இறக்கைகளைக் கொண்ட ‘காருட்மேத்’ ஆகவும் அவன் விளங்குகிறான். திறமைவாய்ந்த ஒருவனைப் பல பெயர்களால், அக்னி, யமன் மாதரிஷ்வன் என்று அழைக்கின்றனர் என்று ரிக் வேதம் கூறுகின்றது. இவ்வாறு இக்கடவுளர்கள் பலவாறு அடையாளப் படுத்தப்-பட்டு உயர்வுபடுத்தப்பட்டு, தெய்வத்-தன்மை உடையவர்களாக்கப்பட்டுக் காட்டப்-படுகின்றனர். இது நேரடியாகப் பல தெய்வ வழிபாட்டு முறைக்கு வழியமைத்துக் கொடுக்கிறது. குறிப்பாகச் சுட்டிக் காட்டப்-பட்ட இவை, இந்துத்துவக் கருத்து யூக வளர்ச்சியில், உண்மை நிகழ்வுகளாகக் கருதப்பட்டன. முதலில் இறைநிலை உணர்வாக இருந்த ஒன்று, பிற்காலத்தில் ஒரு நிறைவான தத்துவமாகக் கருத்துருவாக்கம் பெற்றது.
கடவுளரின் கற்பனை உருவங்கள். அதாவது சிலைகள் மனிதர்களின் கைவண்ணத்தால் உருவானவை; இச்சிலைகள் சில பகுதிகளில் மட்டும் வேதகாலத்தில் பயன்பாட்டில் இருந்தன. சில நேரங்களில் இச்சிலைகளைப் பற்றித் தனிச் சிறப்புடன் பேசப்பட்டிருக்-கின்றது. ஆனால், ஆரியர்களின் நேரடியான மதச் செயற்பாடுகளில் இச்சிலைகள் இடம் பெறவில்லை; இச்சிலைகளைப் பற்றிய குறிப்பும் இல்லை; ஆரியர்களின் மதச் செயற்பாடுகளில் முதன்மையாகப் ‘புனிதமான நெருப்பை வளர்த்தல்’ கடவுளர்க்குச் ‘சோம பானம்’ கொடுத்தல், நெய் அளித்தல், விலங்குகளை வேள்வியில் பலியிடுதல், வேத இசைப் பாடல்-களை ஓதிப்பாடுதல் முதலானவை அடங்கும். பிற்காலத்தில் இந்தியர்கள் _ அவர்களின் வழிபாட்டில் துணைப் பொருட்களாய் இருந்தவை மறையத் தொடங்கியபோது, அவர்களின் கடவுளர் சிலைகளை உருவங்-களைச் செயற்கையாகச் செய்து வைத்தனர்; ஆரியர்களின் ‘பாக்டீரியா’ சகோதரர்கள் (நுண்ணுயிரிகள்) ‘சொராஸ்டிரியர்கள் இவர்களின், பார்சி மொழியில் காணப்படும் இசைப்பாடல்கள்’ வேத இசைப்பாடல்களோடு பெரிதும் ஒத்திருந்தன; இந்தியர்கள் வழிபட்ட கடவுளர்களை _ அவர்கள் வழிபட்டவாறே இவர்களும் வழிபட்டனர். இது வழிபாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றும் ஊழல் மலிந்த-தென்றும், கருதப்பட்டுப் பெரும் எதிர்ப்புக்-குள்ளானது. இந்துக்களின் தேவர்களைப் பூதங்கள் என்றும், இந்திரனை ‘அண்டார் பூதம்’ என்றும், அவர்கள் நடத்தினர். ஒருவகையில் இந்த எதிர்ப்புக்காக சொராஸ்டிரியர்களை நாம் மதிக்க வேண்டும். மேற்கில், மிகுந்த தொலைவிலிருந்து வந்துள்ள நாம், ஆரியர்களின் உடன்பிறந்தவர்களாகிய நாம், உருவ_சிலை வழிபாட்டை அது இயற்கையோ செயற்கையோ சிலை வழிபாட்டை அது எந்த வடிவினதா-யினும் அதனை எதிர்த்து நாம் குரல் எழுப்புகிறோம். சொர்க்கத்தின் ஒளிப்பிழம்பாய் நிற்போராயினும், புகழ்வாய்ந்த பொருளாக நம் கண்களுக்குத் தோற்றமளிப்பதற்கும்கூட, தலைவர், அசரா, அல்லது அகுரா என்ற பெயர்களைக் கொடுப்பதற்கு நாம் மறுக்கிறோம். (அசுரா என்பது ரிக் வேதத்தில் சூரியனுக்கும், நெருப்புக்கும் வழங்கப்படும் பெயர்கள். அகுரா என்பது அறிவுசான்ற ஆசிரியன்.) சூரியனைப் பரம்பொருளின் (தெய்வத் தன்மையின்) செயலாகவும், அதன் பொருட்டுச் செயற்-படுகின்ற இயற்கை ஆற்றலாகவும் நாம் கருதுகிறோம். ஆதலால், மிகுந்த பக்தியுடன்,“எல்லையற்ற இறைவனே! நிகரில்லாத ஒருவன் நீ! யாருடைய புகழ், அதோ அந்தச் சூரியனில் ஒரு பெரும் புள்ளியாக விளங்குகிறதோ, உன்னோடு ஒப்பிடுகிறபோது, அவனுடைய அழகு எப்படி மங்கி ஒளிகுன்றி நிற்கிறது! அவனுடைய பொன்னிற ஒளிக்-கதிர்கள் ஒளிவீசித் தணிந்து போய்விட்டன!’’ என்று நாம் கூறுகிறோம்.
இதுவரை இங்கே குறிப்பிட்டுக் காட்டப்-பெற்ற கருத்துக்களை, இப்போது அவற்றின் மதத் தொடர்புக் கூறுகளோடு விரிவாக நான் விவாதிக்க விரும்பவில்லை. சிறுசிறு கருத்துக்கள் நம்முடைய முதன்மைப் பொருளோடு தொடர்புடையவையாக இருந்தாலும், எல்லாவற்றையும் விருப்பமின்றி நான் விட்டுவிடவில்லை. இப்போது இவற்றை ஒரு முடிவிற்குக் கொண்டு வருகிறேன்.
இண்டஸ் ஆற்றின் கரைகளில் இருந்த ஆரியர்களைப் பற்றிய நம்முடைய சுருக்கமான இந்த ஆய்வு இங்கு கூடியுள்ள அனைவருக்கும் பயன்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக எழுச்சி மிகுந்த பல்வேறு தட்பவெப்-பநிலைகளைக் கொண்ட பிரிட்டனின் ஆதரவைப் பெற்ற இந்த நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து இங்கு குழுமியுள்ள இந்தியக் குடிமக்கள் பலருக்கும் இந்தச் சொற்பொழிவு பயனுடையதாயிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த அரங்கில் உங்கள் அனைவரையும் என் முன்னே காண்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வேதங்களின் மூலப்படிகள் நமக்குக் கிடைத்திருப்பது, பண்டை உலகின் சுவைமிகுந்த ஒரு பகுதியைப் பற்றிய பல்வேறுபட்ட செய்திகளை நாம் அறிந்து-கொள்ள உதவுகிறது. மேலும், ஒரு குறிப்பிடத்தக்க சூழ்நிலையில், நிலைமைகளில் மனிதமனம் மனித அறிவு எவ்வாறு செயல்-படுகிறது என்பதனையும் வேதங்கள் வெளிப்-படுத்துகின்றன. “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியாவை அதன் சமுதாயத் தன்மைகளை வைத்து நோக்கும்போது, பல்வேறு கூறுகளில், தற்கால இந்தியாவைவிட அது சிறப்புடையதாக விளங்கியது என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. தற்போது இந்தியா, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது நல்ல நம்பிக்கையுடன் இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா, தவறுகளின், துன்பங்களின் குழந்தைப் பருவத்தில் இருந்தது. அச்சம் தரக்கூடிய வளர்ச்சியை அடைவதற்கு முடிவு செய்திருந்தது.
சிந்தனையிலும் வழிபாட்டிலும் அது சொர்க்கத்தையும் பூமியையும் உருவாக்கிய அந்தப் ‘பெரியோனுடைய’ காட்சியை இழந்து-விட்டது. உண்மை, ஒளி, அன்பு ஆகியவற்றின் மய்யப் பகுதியிலிருந்து, யூகங்களிலும் நடைமுறையிலும் இங்கும் அங்குமாக அது அலைந்து கொண்டிருந்தது. எங்கும், எல்லாமாகி நிற்கிற, எல்லா வல்லமையும் படைத்த கடவுளால் நெறிப்படுத்தப்பட்ட ‘ஓருலக முன் கருத்தியல் எண்ணம்’ அதற்கு இல்லை. இயற்கையின் செயல்பாடுகளையும் அவற்றிற்குத் துணையாக இருப்பனவற்றையும் தெய்வத்-தன்மை யுள்ளவைகளாக மாற்றி, இவற்றின் மூலவரின் குறிப்பான ஒப்புதலின்றி அவற்றின் முன்னே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடந்தார்கள். புனிதச் சட்டங்களுடன் உறவுடைய ‘ஒழுக்கத் தத்துவம்’ (நேர்மை உணர்வு) _ (இவை ஒன்றுடன் ஒன்று ஒப்புமைத் தொடர்புடையவை), ஒரு தெளிவற்ற கருத்தையே கொன்டிருந்தது. இந்த ஒழுக்கத் தத்துவம், உயிர்ப்பலிக்கு இன்றியமையாத இடம் கொடுத்திருந்த போதிலும், அது அதன் அடிப்படைக் கோட்பாட்டைக் கடந்து போய்விட்டது; பண்டைக் காலத்திய மனிதரின் குற்றத் தன்மைகளுக்கேற்பத் தண்டனை வழங்கப்பட்டுப் பெருந்தொகை, கடவுளின் கருணையால் பெற்றுக்கொள்ளப்பட்டது. அக்கால இந்தியாவில் துதிபாடும் பாடகரும் புரோகிதரும் இருந்தனர். இவர்கள் செல்வத்தின் மீதும் புகழ்மீதும் பேராசைப்பட்டவர்கள். தங்களுக்கு அளவற்ற செல்வத்தை வாரி வழங்கியவர்களைப் பற்றி இவர்கள் வரம்பு மீறிப் புகழ்ந்து தள்ளினார்கள். சாதிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதிகாரத்தையும் தனிஉயர்-நிலைப் தத்துவத்தையும் இவர்கள், முன்னிலைப்-படுத்தி அவற்றைச் செயற்படுத்தி நடைமுறை வழக்கமாக மாற்றுவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள்.
– தொடரும்