இராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராஜே சிந்தியாவின் பேரவைத் தொகுதியான ஜலாவர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு ஒரு உத்தரவு போட்டுள்ளார்.
அதன்படி பெண் ஆசிரியைகள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் தினமும் காலை 5.00 மணிக்கே எழுந்து தங்கள் பள்ளிகள் உள்ள பகுதிகளுக்குச் சென்று அங்கு திறந்த வெளியில் காலைக்கடன்கள் கழிப்போரை படமெடுத்து வாட்ஸ்அப் மூலம் அறிக்கை-யுடன் உடனடியாக தங்கள் உயரதிகாரி-களுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் ஆசிரியை-களும் இந்தக் கடமையிலிருந்து நழுவக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இந்த உத்தரவுக்கு தங்களின் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன. ஆனால், அரசு இந்த எதிர்ப்பினைப் பொருட்-படுத்தாமல் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என விளக்கமளித்துள்ளது.
அம்மாநிலத்தில் இனி ஆசிரியர்களுக்கு மலஜலம் கழிப்போரை உடன் Live ஆக படமெடுக்கும் பணியே பிரதானமாக இருக்கும் எனத் தெரிகிறது. மோடியின் ‘ஸ்வாச் பாரத்’ திட்டத்தின் ஒரு பகுதியோ இது.
செய்தி ஆதாரம்: ‘டெக்கான் கிரானிகல்’ 7.6.2016.
தகவல்: கெ.நா.சாமி