மு.நாகேந்திர பிரபு
பூமிப்பரப்பு 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல்நீரின் அளவு 97 சதவீதமும் மற்றும் நன்னீரின் அளவு 3 சதவீதமாகும். சூழ்ந்துள்ள கடல்நீரின் மொத்த பரப்பு 1,49,400,000 சதுர கிலோ மீட்டர்கள். இதில் பசுபிக் மகா சமுத்திரம் 35.25 சதவீதத்தையும், அட்லாண்டிக் மகா சமுத்திரம் 20.09 சதவீதத்தையும், இந்து மகா சமுத்திரம் 14.65 சதவீதத்தையும் ஆக்ரமித்துள்ளன. கடல்கள் 1.3 ஙீ 1018 டன் அளவுள்ள நீரைத் தன்வசம் கொண்டதாக இருக்கிறது. சூழலில் உள்ள நன்னீர் அளவில் பனிமலை/பனிக்கட்டி 69 சதவீதத்தையும், நிலத்தடி நீர் 30.1 சதவீதத்தையும், மேற்பரப்பு நீர் 0.3 சதவீதத்தையும், மற்றவை 0.6 சதவீதத்தையும் கொண்டுள்ளன. இதில் மேற்பரப்பு நீரளவில், ஏரிகள் 87 சதவீதத்தையும், சதுப்பு நிலங்கள் 11 சதவீதத்தையும், ஆறுகள் 2 சதவீதத்தையும் கொண்டதாக உள்ளன. மொத்த ஹைட்ரோஸ்பியர் நீர்த்தொகுதியில் உத்தேச நீர் அளவு 1,36,00,00,000 கி.மீ3 (32,60,00,000 மில்லியன்3) கன அடிகள். பூமியைச் சுமந்துள்ள காற்றில் 1,55,00,00,00,00,000 டன் தண்ணீர் நீராவி வடிவில் உள்ளதாகவும்; ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ள காற்றுப் பரப்பில் ஈரப்பதம் சாதாரணமாக 1,00,00,00,00,00,00,000 லிட்டர் என்றும்; நீரியல் சுழற்சியில் (Hydrological Cycle) 38,000 கன கி.மீட்டர் அளவுள்ள நீர் உட்பட்டு இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் 600 மைல் உயரம் வரை இருக்கும் காற்றுவெளி 1 சதுர அங்குலப் பரப்பில் 15 பவுண்டு எடையைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு 1,00,000 நியூட்டன்/மீ2 (105 நியூட்டன்/மீ2). பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தின் மொத்த எடை 5,00,00,00,00,00,00,000 (5 X 1015) டன்.
மனித உடலானது 55% முதல் 78% வரையில் நீரால் ஆனது. இரத்தத்தில் 90% நீர் தான் உள்ளது. பொதுவாக ஆண்கள் நாளொன்றுக்குக் குறைந்தது 2 லிட்டர் நீரும், பெண்கள் 2.7 லிட்டர் நீரும் குடிப்பது அவசியமானது. ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் ரிஸேர்ச் கவுன்சில் 3.7 லிட்டர் நீரைப் பரிந்துரைக்கிறது. ‘ஒரு நாளில் ஒரு மனிதன் குடிக்க, துவைக்க, சமைக்க மற்றும் உடல்நலன் பேண என குறைந்தது 50 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறான்’ என்று ‘அய்க்கிய நாடுகள் சபை’ குறிக்கிறது. தாவர வேர்த்தூவிகள் வேர் மற்றும் மண்ணிற்கு இடையே அயனிகளின் செறிவு வேறுபாட்டைத் தோற்றுவிக்கின்றன. இச்செறிவு வேறுபாட்டை நீக்க நீரானது மண்ணிலிருந்து வேருக்குள் செல்கிறது. இன்னொரு வகையாக செல்களில் நீர் மூலக்கூறுகள் ஆவியாதலினால் உருவாகும் ஓர் இழுவிசை வேர்களின் சைலத்திலிருந்து நீரை மிக உயரத்திற்கு மேலேற்றுகிறது. நீராவிப் போக்கானது வேரிலிருந்து நீர் மற்றும் கனிமப் பொருட்களை உறிஞ்சுவதற்கும், அவற்றினை இலைகள் வரை மேல்நோக்கிக் கடத்துவதற்கும் உதவுகிறது. வெப்பநிலையைச் சீராக்கிக் கொள்ள, கழிவை வெளியேற்ற, ஆற்றலை உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்ல மனித உயிர்களும், மரம் செடி கொடிகளும் நீரை உட்கொள்ளவும் / உறிஞ்சவும் செய்கின்றன. நீர் உடலிலிருந்து மலம், சிறுநீர், வியர்வை, மூச்சுக்காற்று இவற்றின் மூலமாக வெளியேறுகிறது. ஒரு மனிதனால் தண்ணீர் இல்லாமல் 7 நாட்கள் வரை மட்டுமே உயிரோடு இருக்க முடியும். உணவுப் பொருட்களில் பால் 87 சதவீதம், உருளைக்கிழங்கு 75 சதவீதம், முட்டை 73 சதவீதம் என எல்லாமும் ஒரு குறிப்பிட்ட சதவீத நீரைத் தன்னுள்ளாகக் கொண்டுள்ளன.
சர்வதேச மனித உரிமைப் பிரகடனம், சரத்து -_ 25’இன்படி “ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவனது குடும்பத்தின் சுகாதாரமான வாழ்க்கை மேம்படவும் அடிப்படையான ஒரே தேவை -_ சுத்தமான தண்ணீர். இது உலகெங்கிலும் உள்ள மக்களின் அடிப்படை உரிமையாகும்’’. ‘ஆசிய மனித உரிமைகள் சாசனம் _- 1998, பிரிவு 7:1’இன் படி “ஒவ்வொரு தனி மனிதனும் வாழ்க்கைக்கான அடிப்படை தேவையைப் பெறுவதற்கும், சுரண்டல் மற்றும் தவறாகப் பயன்படுத்தப்-படுவதற்கு எதிரான பாதுகாப்புப் பெறவும் உரிமை உடையவர்கள். கல்வியறிவு பெறவும், உணவு, சுத்தமானக் குடிநீர் மற்றும் வீடு ஆகியன பெறவும், நலமாக இருந்தலுக்கான மருத்துவ உதவி பெறவும் உரிமை உண்டு. தொழில்நுட்பம் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எல்லா தனி மனிதர்களுக்கும், மனித குழுக்களுக்கும் உரிமை உண்டு’’. ‘இந்திய அரசியலமைப்பின்’படி “தண்ணீர் பொதுச்சொத்து. ஜாதி, மத, பொருளாதார, இனப்பாகுபாடு பார்க்காமல் அனைவரும் அதைப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டியப் பொறுப்பு அரசுக்கு உள்ளது’’. ‘அய்க்கிய நாடுகள் சபையின் முன்னாள் தலைவர் கோபி அன்னன்’ அளித்த செய்தி ஒன்றில் “தண்ணீரைப் பயன்படுத்துவோர் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப் படும்போது, காசு இல்லை என்ற காரணத்தால் ஒருவன் தாகத்தால் தவித்துச் சாக வேண்டிய துர்பாக்கியம் நேர்ந்துவிடக் கூடாது. ஆனால், இன்றைய உலகச் சூழ்நிலை அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகக்குறைந்த வருமானமுள்ள மக்கள் தான் தண்ணீருக்கு அதிக விலை தர வேண்டி உள்ளது.’’
இந்தியா 804’ வட அட்சம் முதல் 3706’ வட அட்சம் வரையிலும், 6807’ கிழக்கு தீர்க்கம் முதல் 97025’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவி 32,87,263 ச.கி.மீ பரபளவைக் கொண்டுள்ளது. 23லு0 வடக்கு அட்சமாக கடகரேகை இந்தியாவின் குறுக்காக சென்று நாட்டை வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலம் என இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. வெப்ப மண்டல நாடுகள் என்று அழைக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மார், ஏமன், மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகளும் ஒரு குழுவாக 2004 முதல் வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு அந்தந்த நாட்டு மொழியில் 8 பெயர்கள் என மொத்தம் 64 பெயர்களைப் பட்டியலிட்டு சுழற்சி முறையில் பெயரிட்டு வருகின்றன. கொரியாலிஸ் விளைவு (Coriolis Effect) என்பது நிலநடுக்-கோட்டுக்கு (Equator) வடக்கே உருவாகின்றப் புயல்கள் அனைத்தும் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகச் (Anti Clockwise) சுழல்வதாகவும், நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே உருவாகின்றப் புயல்கள் இடமிருந்து வலமாகச் (Clockwise) சுழல்வதாகவும் இருக்கும். வடக்கே அருணாச்சலப் பிரதேசம் வரை 2933 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது. வடக்கே இமயமலையும், மேற்கே அரபிக்கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் சூழ்ந்துள்ளது. நீர்சுழற்சியில் பெரும்பகுதி கடலிலிருந்தே மேலேழும்புகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் நீலகிரி மலை, ஆனை மலை, பழனி மலை, கொடைக்-கானல் மலை, குற்றாலம் மலை, மகேந்திரகிரி மலை, அகஸ்தியர் மலை, ஏலக்காய் மலை, சிவகிரி மலை மற்றும் வருஷநாடு மலையும்; கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, பச்சை மலை, கொல்லி மலை, ஏலகிரி மலை மற்றும் செஞ்சி மலை; இரத்தினகிரி மலை, வள்ளி மலை, சென்னி மலை, சிவன் மலை, கஞ்ச மலை மற்றும் தீர்த்த மலை என பலவும் இருக்கின்றன. ஆறுகளின் பிறப்பிடமாக மலைகள் இருக்கின்றன. எந்த ஆறும் சமவெளிகளில் பிறப்பெடுப்பதில்லை. கடல் மட்டத்திற்கு மேலே ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் வெப்பநிலை 10 செல்சியஸ் வீதம் குறைகிறது. மழை மேகங்கள் மலைகளில் மோதி மேலெழும்போது குளிர்ந்து மழையைப் பொழிகின்றன. இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் 6000 கி.மீ. அந்தமான் நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவு கடற்கரைகளையும் சேர்த்து அதன் நீளம் 7516 கி.மீ. மழை மேகங்கள் கரையை விட்டுவிட்டு மத்தியிலேயே சென்றுப் பொழிவதில்லை; அதன் காரணமாகத்தான் வானிலை அறிக்கைகள் பெறப்படும் போது கடற்கரையோர மாவட்டங்கள் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
வானத்தில் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும்பொது மழைப் பனியாகிறது. பூமியை அடையும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் ‘பனிமழையாகப்’ பொழிகிறது. பனியாக வரும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில் காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம் உறைவெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும்போது ‘நீராகி’ விடுகிறது. மழை நிலத்தை நெருங்கும்முன் மீண்டும் குறைந்த வெப்பம் இருக்குமானால் சிறு ‘பனிக் கட்டிகளாக’ விழும். பூமியில் விழுந்த பின் நிலத்தின் குறைந்த வெப்பம் காரணமாகப் பனியால் அது ‘உறையும் (கண்ணாடி போல்) மழை’. ஒரு நாளில் பொழியும் மழையின் அளவு 2.5 மி.மீ வரை இருந்தால் அன்றைய நாளில் மழை பொழிந்தது என்றும், 2.5 – 7.5 மி.மீ வரை இருந்தால் லேசான மழை என்றும், 7.6 _- 35.5 மி.மீ வரை இருந்தால் மிதமான மழை என்றும், 35.6 -_ 64.4 மி.மீ வரை இருந்தால் பலத்த மழை என்றும், 64.5 _- 124.4 மி.மீ வரை இருந்தால் மிக பலத்த மழை என்றும், 124.5 மி.மீ மேல் இருந்தால் அது அசாதாரண பலத்த மழை-யாகவும் கணக்கிடப்படுகிறது. அசாதாரணமாக மழை பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, இமய மலைப்பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகிறது. இந்தியாவில் அதிகப்பட்சமாக மேகால-யாவிலுள்ள சிரபுஞ்சியில் 11,000 மி.மீட்டர் மழை பொழிகிறது. மழை மேகங்களில் நுண்ணிய உப்புத் துகள்கள், பனிக்கட்டி, சில்வர் அயோடைட் படிமங்கள், திண்ம நிலை கார்பன்_-டை_-ஆக்ஸைடு உள்ளிட்டவை தூவுவது போன்றவை செயற்கை மழையைப் பொழிவிக்கும் முறைகளாகப் பின்பற்றப்-படுகின்றன.
தமிழகத்தில் மழை
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலாகப் பொழியும் வடகிழக்குப் பருவக்காற்று மழை சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, செங்கற்பட்டு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்-களில் 150 செ.மீ முதல் 200 செ.மீ வரையிலான மழைப்பொழிவையும்; திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 100 செ.மீ முதல் 150 செ.மீ வரையிலான மழைப் பொழிவையும் கொடுக்-கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலாக பொழியும் தென்மேற்குப் பருவக்காற்று மழை நீலகீரி, கன்னியாகுமரி, கோவை மாவட்டத்தின் மேற்குப்பகுதி , தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமான மழையைக் கொடுக்கிறது.
தமிழக நீராதாரங்கள்
வனமாக விளங்கும் மலைகளில் சறுகுகள் நிறைந்து காணப்படும். சறுகுகள் பெய்யும் மழையை உள்வாங்கி சிறிது சிறிதாகக் கசியச் செய்கிறது. இந்த சொட்டுக்கள் ஒன்றுசேர்ந்து நீரோடையாகி அவை இணைந்து அருவியாகி சமவெளியை அடைந்து நதியாகிறது. மேலும் நதிகள் பனி உருகுவதாலும் பிறக்கின்றன. நீரில் கார்பன் – டை – ஆக்ஸைடு கரைவதால் ஏற்படும் சிறிய அளவு கார்பானிக் அமிலம் பாறை-களையும் கரைக்கும் திறன் உடையது. சரிவை ஒட்டி அதன் ஓடும் வேகம் இருக்கிறது. ஓடும் பாதையில் இருக்கும் மணலையும், பாறை-களையும் அரித்துவிடுவதால் படுகைகள் பிறக்கின்றன. நீரின் தன்மை மட்டத்தில் பரவி இருப்பது; நிலத்தின் சிறு கீறல் கூட நாளடைவில் ஆற்றின் வழித்தடமாக மாற்றம் பெறலாம். ஆரணியாறு, கூவம் ஆறு, பாலாறு, செய்யாறு, வராகு ஆறு, பெண்ணையாறு, மணிமுத்தாறு, குமுக்கி ஆறு, கொள்ளிடம் ஆறு, காவிரி ஆறு, நொய்யல் ஆறு, அமராவதி ஆறு, வெட்டாறு, வெள்ளாறு, வைகை ஆறு, குண்டாறு, வைப்பாறு, சித்தாறு, தாமிரபரணி ஆறு, கொற்றலையாறு, கெடிலாறு, குடமுருட்டி ஆறு, உப்பாறு, பவானி ஆறு, சிறுவாணி ஆறு, சுருளியாறு மற்றும் மஞ்சளாறு என ஆறுகளும்; சாத்தனூர் அணை, மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, வைகை அணை, பூண்டி நீர்த்தேக்கம், பிளவக்கல் அணை, பேச்சிப்பறை அணை, பைகார அணை, கல்வராயன் அணை, கல்லணை, பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை மற்றும் பரம்பிக்குளம் அணை என அணைகளும்; பழவேற்காடு ஏரி, பேரிஜம் ஏரி, கொடைக்கானல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, மதுராந்தகம் ஏரி, செங்கற்பட்டு ஏரி, ஊட்டி ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, சிங்காநல்லூர் ஏரி, வாலாங்குளம் ஏரி, வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வால்பாறை ஏரி, பெருஞ்சாணி ஏரி, பேச்சிப்பாறை ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, அம்பத்தூர் ஏரி, கழிவேலி ஏரி மற்றும் போருர் ஏரி என ஏரிகளும்; ஒகேனக்கல் நீர்விழ்ச்சி, குற்றாலம் நீர்வீழ்ச்சி, பைகாரா நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சி மற்றும் கும்பக்கரை நீர்வீழ்ச்சி என நீர்வீழ்ச்சிகளுமாக; மொத்தத்தில் தமிழக நீர் ஆதாரங்களாக 17 ஆறுகள், 15 ஏரிகள், 71 நீர்த்தேக்கங்கள், 40,319 குளங்கள், 21.205 குட்டைகள், 2,395 கால்வாய்கள், 1,62,11,391 தரைக் கிணறுகள் மற்றும் 2,87,304 ஆழ்குழாய் கிணறுகள் என்று பட்டியல் மிக நீண்டதாக இருக்கிறது.
சொர்ணவாரி – சித்திரையில் நடவு நட்டு புரட்டாசியில் அறுவடை செய்யப்படுவது சித்திரைப் பட்டம். இதற்கு ‘கரீப் (ரிணீக்ஷீவீதீ)’ என்று மற்றொரு பெயரும் உண்டு. சம்பா பருவம் _- ஆடி மாதத்தில் விதைத்து தையில் அறுவடை செய்யப்படுவது ஆடிப்பட்டம், நவரைப் பருவம் -_ கார்த்திகையில் விதைத்து சித்திரையில் அறுவடை செய்யப்படுவது கார்த்திகைப் பட்டம். இதற்கு ரபி (Rabi) என்று மற்றொரு பெயரும் உண்டு. இப்படியாக எல்லாக் காலங்களிலும் விவசாயம் செய்ய ஏற்ற சூழல் நிலவும் நாடு இந்தியா; அதிலும் குறிப்பாகத் தமிழகம்.
தொடரும்…