ஈர்ப்பாற்றல் அலைகள் கண்டுபிடிப்பு: அய்ன்ஸ்டீன் கோட்பாடு நிரூபணம்

ஜூன் 16-30

அறிவியல் துறையில் புதிய வரலாற்று நிகழ்வாக, உலகின் தோற்றத்துக்குக் காரணமான ஈர்ப்பாற்றல் அலைகளின் இருப்பை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்மூலம் கடந்த நூற்றாண்டில் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் கூறிய வெளியும் காலமும் ஒன்று என்ற சார்புநிலைக் கோட்பாடு, உண்மை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

விண்வெளியில் கருந்துளைகள் எனப்படும் நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது (பெருவெடிப்பு) அவை இணைந்து ஈர்ப்பாற்றல் அலைகள் உருவாக்குகின்றன. இவை சுருங்கி விரிவடைவதன் மூலம் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஓசைமயமான இந்த ஈர்ப்பாற்றல் அலைகள் பிரபஞ்சத்தின் ஒலிவழித்தடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. “இந்த ஈர்பாற்றல் அலைகளின் விரிவாக்கம்தான் வெளியையும் காலத்தையும் உருவாக்குகின்றன. உண்மையில் வெளியும், காலமும் ஒன்றுதான்’ என்ற சார்புநிலைக் கோட்பாட்டை (ரிலேட்டிவிட்டி தியரி) பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். பின்னர் அவரே இந்தக் கோட்பாடு குறித்து சந்தேகத்தையும் எழுப்பினார். இருப்பினும் விஞ்ஞானிகள் இதில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர், சுமார் 110 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் லிகோ எனப்படும் ஊடொளி அளவீட்டு ஈர்ப்பாற்றல் அலை நுண்ணோக்கி (லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் கிராவிட்டேஷன் வேவ் ஆப்ஸர்வேட்டரி) என்ற அதிநவீன சாதனத்தின் மூலம் பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நுண்ணோக்கி, பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் அண்மையில் இரு கருந்துளைகளின் மோதலால் எழுந்த ஓசையின் நுண்ணிய ஈர்ப்பாற்றல் அலைகளைக் கண்டறிந்துள்ளதாக இந்தக் குழுவினர் வியாழக்கிழமை அறிவித்தனர்.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் விண்-வெளியைக் கண்களால் மட்டுமே ஆய்வு செய்துவந்த விஞ்ஞானிகள் இனி செவிகளாலும் அதனை மேற்கொள்வார்கள் என்று இக்குழுவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலைக்-கழக விஞ்ஞானி ஸ்சாபோல்க்ஸ் மார்க்கா கூறினார். இதேபோல், கடந்த 2012ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ஹிக்ஸ்போஸான் துகள் கண்டுபிடிப்புக்கு ஒப்பானது இது என்றும், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கிக்குப் பிறகு அறிவியல் துறையின் திருப்புமுனை கண்டு-பிடிப்பு இது என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் அய்ன்ஸ்டீன் கொள்கை ரீதியில் கூறிய கருத்து, தற்போது நிரூபணமாகியுள்ளது.

மோடி பாராட்டு: ஈர்ப்பாற்றல் அலை-களைக் கண்டறிந்துள்ள சர்வதேச விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய ஆய்வாளர்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது-குறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், “சவால்மிக்க இந்தச் சாதனையில் இந்திய விஞ்ஞானிகளின் பங்கு குறித்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். இந்த வரலாற்றுக் கண்டுபிடிப்பு மூலம் பிரபஞ்சத்தை நன்கு அறிந்துகொள்ள புதிய வாய்ப்பு உருவாகி-யுள்ளது. ஈர்ப்பாற்றல் அலைகள் தொடர்பான மேலும் முன்னேற்றகரமான ஆய்வுகள் இந்தியாவில் இனி நடைபெறும் என உறுதியுடன் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *