எழுபது எண்பது வயதில் வந்த மாரடைப்பு இப்பொழுது முப்பது நாற்பது வயதில்… ‘தினம் நாலு பரோட்டா தின்னுகிட்டு நல்லாத்தான் இருந்தான்…. மாரடைப்பு வந்து இப்படி பொட்டுன்னு போயிடுவான்னு யாருப்பா நினைச்சா…!’ என்ற புலம்பல் _ மதுரையைத் தாண்டி விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள்ல வழக்கமாகிவிட்டது.
33, 31, 34, 35, 37, 39, 41, 43, 46 _ இதெல்லாம் ஏதோ ஜட்டி, பனியன் அளவு இல்லை. கடந்த இரண்டு மாதத்தில் விருதுநகர் பகுதியில் மாரடைப்பால் மரணமடைந்த இளைஞர்களின் வயது! முதன்மைக் காரணம் பரோட்டா என்கின்றனர்.
ஒரு இடத்துல பத்து வீடு இருந்தா பக்கத்துல ஒரு பரோட்டாக் கடை. ஏழு மணியோட இட்லி காலி, ஒன்பது மணியோட தோசை முடிஞ்சது… ஆனால் பரோட்டா மட்டும் இருபத்திநாலு மணிநேரமும் கிடைக்கும். மூன்று ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் வரை வசதிப்படி, ருசிப்படி பலவித பரோட்டா கிடைக்கும்.
‘சாவுக்குத் துணிஞ்சா பரோட்டா சாப்பிடுங்க!’ன்னு பெரிய பெரிய இதயநோய் மருத்துவர்களெல்லாம் சொல்கிறார்கள்.
“ஆரோக்கியமான உணவு என்றால் ஆவியில் வேக வைப்பதும் அதிகப்படியா தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படுவதும்தான். இட்லி, இடியாப்பம், ஆப்பம்னு நம் பாரம்பரிய உணவுகள் இப்படிச் செய்யப்படுபவை. ஆனால், மைதாவைப் பொறுத்தவரை எவ்வளவுக்-கெவ்வுளவு எண்ணெய் சேர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சுவை. அதாவது நம் உடலுக்கு வேண்டாத கொழுப்பையும், கொலஸ்ட்ராலையும் கொத்தா கொண்டு வந்து நம் உடம்புல சேர்த்து, நல்லா இருக்கிற இரைப்பை, குடல், இதயம், கல்லீரல், கணையம்னு எல்லாத்தையும் பாழாக்குவது பரோட்டா. இன்னும் அழுத்தமா சொல்லனும்னா தினசரி பரோட்டா தின்பது மரணத்தை முன் தேதியிட்டு அழைக்கும் செயலாகும்’’
“பரோட்டான்னா எனக்கு உசிரு. ஒரு நாளைக்கு பத்து பரோட்டாவாவது சாப்பிடுவேன். பல வருஷமா இப்படித்தான். ஆனால், இப்பத்தான் அடிக்கடி தலசுத்து வருது. நடுஇரவில் ‘சாப்பிட்டா வாந்தி வர்ற மாதிரி இருக்கு; என்னன்னு தெரியலை’ என்பது பரோட்டாவால் பாதிக்கப்பட்ட நிலைதான்.
தமிழ்நாட்டுல ஒரு நாள் பரோட்டாவே விக்கலைன்னா பல நூறு டன் மைதா மட்டுமல்ல, வழக்கமா விக்கிற எண்ணெய் அளவுல எண்பது சதவிகிதம் தேங்கிவிடும். காரத்துக்கு பயன்படுத்தப் படும் பொடிகள் அய்ம்பது சதவிகிதம் விற்பனை யாகாது. எண்ணெயும், காரமும் இதயத்துக்கும், குடலுக்கும், எவ்வளவு கெடுதி என்பது எல்லோருக்கும் தெரியும். அதை மறைமுகமா நமக்குள்ள சேர்ப்பது இந்தப் பரோட்டா.
கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மைதாதான் பரோட்டாவிற்கான மூலப்பொருள். ஆரம்பத்தில் சற்றே மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும் மைதாவை தும்பைப் பூப்போல் வெள்ளை நிறத்துக்கு மாற்றுவார்கள். அதற்கு பென்சாயில் பெராக்சைடு என்கிற ரசாயனத்தைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். அது ஒரு கொடிய விஷம்.
மைதா மிருதுவாக இருப்பதற்குக் காரணம் அலோக்ஷன் என்னும் இரசாயனப் பொருள் சேர்க்கப்படுவதுதான். இந்த இரண்டு கொடிய வகை ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் (!) இப்படிப்பட்ட மைதாவில் செய்யப்படும் பரோட்டாவைத்தான் நாம் நாள்தோறும் சாப்பிடுகிறோம்.
மைதாவை மிருதுவாக்க சேர்க்கப்படும் அலோக்ஷன் கணையத்துக்குள் ஊடுருவி அதனை செயலிழக்கச் செய்துவிடும். இதனால் இன்சுலின் சுரப்பது தடைபடும். அதனால் குளுகோஸ் உற்பத்தி எகிறி சர்க்கரை நோய் வரும் ஆபத்தும் உண்டு!’’
அதிகப்படியான மாவுச்சத்து இருப்பதால் தேவைக்கதிகமான கலோரிகளை உடலுக்குள் திணித்து குழந்தைகளுக்கு உடல் பருமனை ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்தத்துக்கும் இது காரணமாக அமைகிறது.
தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்கும் பரோட்டாக்களைவிட, எண்ணெயில் நன்றாக பொரித்து எடுக்கும் பரோட்டாவில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். அது இதய ரத்தநாளங்களுக்குள் அடைப்பை ஏற்படுத்துவதால் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
“மைதாவில் தண்ணீர் ஊற்றினாலே பசைபோல் ஒட்டும். இந்த பசைத்தன்மை உடலிலிருந்து வெளியேற 24 மணி நேரம் ஆகும். சிறுகுடல், பெருங்குடல் ஆகிய இடங்களில் தங்கித் தங்கி செல்வதால் அந்த நேரத்தில் கிருமிகள் உடலில் உற்பத்தியாகிவிடும். பரோட்டாவை அடிக்கடி சாப்பிடுவதால், முதலில் வயிறு உபாதை பிரச்சினை வரும். பிறகு இதய நோய், மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
ஒரு காலத்தில் பசை மட்டுமே தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மைதாவை பல நூறு டன்கள் விற்பதற்கு அலோக்ஷன் எனும் விஷம் கலந்து, பரோட்டா எனும் பண்டத்தையும் உருவாக்கி மக்களை அதற்கு அடிமையாக்கி-விட்டனர். விளைவு, இன்று சில்லறைக் கடைகளில் சிறுதானிய மாவுகள் கிராம் கணக்கில் விற்பனையாக, மைதாவோ மூட்டைக் கணக்கில் விற்பனையாகிறது. ஸீ