அய்.டி. வேலைக்குத் தகுதிப்படுத்திக் கொள்வது எப்படி?

மே 01-15

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கு பெறுவோர், கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காது அய்.டி. வேலைக்காக கடும் முயற்சி எடுப்போர் போன்றவர்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சாஃப்ட்வேர் வேலைக்குத் தயாராவது குறித்த சில ஆலோசனைகள்.

இன்றைய இளம் பெண்களின் கனவு வேலை அய்.டி. துறைதான். என்னதான் சாஃப்ட்வேர் துறை முன்பளவுக்கு பிரகாசமாக இல்லை என்றாலும்கூட, பெரும்பான்மையானவர்களுக்கு அய்.டி. துறை மேல் உள்ள ஈர்ப்பு குறையவில்லை என்பதே நிதர்சனம். காரணம், மற்ற துறைகளை விட இந்தத் துறையில் மிகச் சுலபமாகக் கிடைக்கக்கூடிய அதிகளவு சம்பளம். மற்ற சலுகைகள் சொகுசான வாழ்வுதான். செகுசு லைஃப் ஸ்டைலும்தான்! அதேபோல வருடத்துக்கு வருடம் உயரும் அதிக சம்பளம் மற்றும் வாரத்துக்கு இரண்டு நாள் விடுமுறை. முக்கியமாக வீட்டிலேயே இருந்து கூட லீவு போடாமல் அலுவலக வேலையை கவனிக்க முடியும் என்பது போன்ற வசதிகளும் இந்த அய்.டி. நிறுவனங்களின் மேல் இன்றைய இளைஞர்களுக்கு அளவிட முடியாத ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

அதுமட்டுமின்றி பி.இ. மற்றும் எம்.சி.ஏ. படித்தவர்கள் மட்டுமின்றி பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம். படித்தவர்களும்கூட பல அய்.டி. நிறுவனங்களால் சாஃப்ட்வேர் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.

கேம்பஸ் இன்டர்வியூ என்பது இன்றைய இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைக்கு இன்ஜினீயரிங் படிக்கப்போகும் அனைத்து மாணவ, மாணவர்களுக்கும் டாப் 10 முதல் டாப் 30 வரிசைத்தரத்தில் உள்ள கல்லுரிகளில் இடம் கிடைக்குமா என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய கல்லூரிகளில் படித்தால்தான் Tier 1 மற்றும் Tier 2 கம்பெனிகளில் இருந்து வந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவார்கள். அதன் மூலம் அந்த கம்பெனிகளில் வேலையும் கிடைக்கும் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம்!

Tier 1 கம்பெனிகள் என்பது ஒரு பில்லியன் டாலருக்கு அதிகமான வருவாய் மற்றும் 50,000க்கும் அதிகமான பணியாளர்களை வைத்திருக்கும் நிறுவனங்கள். அதேபோன்று Tier 2 கம்பெனிகள் என்பது 100 மில்லியன் டாலருக்கும் குறைவான வருவாய் மற்றும் 10,000 பணியாளர்களை பணியில் வைத்திருக்கும் நிறுவனங்கள்.

இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்குச் சேருவதற்குத்தான் அதிகமாய் ஆசைப்படுகிறார்கள். மற்ற சாதாரண நிறுவனங்களைவிட இத்தகைய நிறுவனங்களில் நல்ல சம்பளமும் சிறப்பான வேலைச் சூழலும் தங்களுக்குக் கிடைப்பதால்.
இப்படி எண்ணற்ற கனவுகளுடன் இருக்கும் இளைஞர்கள் இந்த அய்.டி. சாஃப்வேர் துறையில் நுழைவதற்கு முன் பல கட்ட நேர்முகச் சுற்றுகளை கடந்துதான் அய்.டி. கம்பெனிகளில் கால்பதிக்க முடியும்.

அய்.டி. வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும்போது சில நிறுவனங்கள் இரண்டு, மூன்று நிலைகளிலும், இன்னும் சில நிறுவனங்கள் பத்து நிலை வரையும்கூட நேர்முகச் சுற்று தேர்வுகளை நடத்துகின்றன. பொதுவாக, சாஃப்ட்வேர் துறைக்காக நிறுவனங்களால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வுகள் கீழ்க்கண்ட முறையில் இருக்கும்.  (கேம்பஸ் இண்டர்வியூவில் சில நேர்முகத் தேர்வுகள் தவிர்க்கப்படலாம்.)

ஜெனரல் ஆப்டிடியூட் டெஸ்ட், குழு விவாதம் (Group discussion), சைகோமெட்ரிக் அஸெஸ்மெண்ட் டெஸ்ட், டெக்னிகல் ரவுண்டு (Written & Face To Face), பிராக்டிகல் அல்லது செஸ்டம் டெஸ்ட், டெலிபோனிக் சுற்று (Onsite call on H.R.Call).

ஜெனரல் ஆப்டிடியூட் டெஸ்ட்: உங்களைப் பற்றிய பொதுவான மதிப்பீடு மற்றும் உங்களின் கணித, ஆங்கில மற்றும் Analysical & Logical Reasoning திறமைகளை மதிப்பிடுவதற்காக நிறுவனங்கள் முதலிலேயே இந்தச் சுற்றை நடத்துகின்றன. அதேபோன்று இந்தச் சுற்றுக்கு இன்னும் ஒரு சில நிறுவனங்கள் ‘நெகடிவ் மார்க்’ வழங்கும் முறையும் வைத்துள்ளன. அதனால், இந்தச் சுற்றை வெற்றிகரமாக கடந்தால்தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

குழு விவாதம் (Group discussion round): பெரும்பாலும் மாணவர்களின் Communication Skill  மற்றும் Presentation Skill–அய் அறிவதற்காக நடத்தப்படும் விஷயம் இது. பெரும்பாலும் குரூப் டிஸ்கஷனில் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி பேசக் கூடிய சூழலே அதிகம்.

ஆப்டிடியூட் டெஸ்ட் மற்றும் குரூப் டிஸ்கஷன் சுற்றுகள் இரண்டுமே பெரும்பாலும் Elimination சுற்றுகளுக்காக நிறுவனங்களால் நடத்தப்படுபவையாக இருப்பதால் இந்த இரண்டிற்கும் முறையாக முன்பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம்.

சைக்கோமெட்ரிக் அஸெஸ்யீமெண்ட்: இந்தச் சுற்றில் எழுத்துத் தேர்வாக இருப்பின் உங்களது பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகளே பெரும்பாலும் இருக்கும். தவிர, புரோகிராமிங் கேள்விகளும் கேட்கப்படலாம். நேர்முகத் தேர்வில், இதே கேள்விகளை One to one ஆக அல்லது H.R.,டெக்னிக்கல் பிரிவின் தலைவர், டீம் லீடர் என ஒன்றுக்கு மேற்பட்ட பலர் அமர்ந்தும் கேள்விகளைத் தொடுக்கலாம்.

System Test: இந்தச் சுற்றில் நேரடியாக கம்ப்யூட்டர் மூலம் பிராக்டிகல் டெஸ்ட் நடக்கும். நமக்குக் கொடுக்கப்பட்ட புரோகிராமிங் டாஸ்க்குக்கு (Programming Task)  ஏற்றவாறு Coding செய்வது Result அய் தருவிக்க வேண்டியதாக இருக்கும்.

டெலிபோனிக் சுற்று: இந்தச் சுற்று நீங்கள் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பிறகு ‘ஆன்சைட் கால்’ மூலமாக உங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர், உங்களை நேர்காணல் நடத்தலாம். அதுபோக உங்கள் நிறுவனத்தின் H.R. உங்களை மொபைலில் அழைத்து வேலை சம்பந்தமாகப் பேசும்போது நீங்கள் அளிக்கும் பதில் மூலம் உங்கள் குரலின் ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் தெரிந்து கொள்வர்.

உங்கள் தன்விவரக் குறிப்புகள் அய்.டி. வேலைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்வது முக்கியம். உதாரணமாக, அய்.டி. வேலைக்கு முதலில் கல்லூரிப் படிப்பு, பள்ளிப் படிப்பு என்ற ஆர்டரில்தான் ரெஸ்யூம் தயார் செய்ய வேண்டும். உங்கள் லட்சியம் மற்றும் விருப்பம் (Areas of interest) போன்றவை சாஃப்ட்வேர் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அதை விடுத்து வேறு துறைகளை பற்றி இருப்பது கண்டிப்பாகக் கூடாது.

பொதுவாக, இன்டர்வியூவுக்காக ஒரு நிறுவனத்தின் வாசலில் கால் எடுத்து வைக்கும் போதே செக்யூரிட்டி கேட்டிலிருந்தே உங்கள் இன்டர்வியூ தொடங்கி விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். சில நிறுவனங்களில் CCTV கேமரா மூலம் உங்களின் ஒவ்வொரு அசைவுகளும் கண்காணிக்கப்படும். ஏன் உங்களுக்கு அருகிலிருப்பவர்கூட ஹெச்.ஆராக இருக்க வாய்ப்புண்டு. எனவே, எதிர்மறையாக எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் செய்யவோ, பேசவோ கூடாது.

இறுதியாக, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியோ அல்லது திட்ட மேலாளரோ உங்களை நேர்முகத் தேர்வு செய்வார்கள். அய்.டி. வேலைக்கு முக்கியமாக உங்கள் படிப்புடன் கூடுதலாக புரோகிராமிங் லாங்குவேஜ்கள் மற்றும் டெஸ்டிங் கான்செப்ட்கள் போன்றவற்றை படித்துக் கொள்ளலாம்.
உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அய்.டி. துறையில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’க்கள் பெருமளவு குறைந்திருக்கின்றன. இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால் தளர்ந்து விடாமல் நிறுவனம் சிறிதோ, பெரிதோ வேலையில் சேர்ந்து உங்கள் அறிவையும் அனுபவத்தையும் பெருக்கிக் கொண்டால் நிச்சயமாக அய்.டி. துறையில் சாதனை படைக்கலாம். பணியில் ஈடுபாட்டுடன் உழைத்தால், உயர்வு நிச்சயம்! ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *