மல்லையா மத்திய அரசின் செல்லையாவா?

ஏப்ரல் 16-30

சாராய சாம்ராஜ்ய சக்ரவர்த்தி விஜய் மல்லையா 9000 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல், தவணை கடந்த பாக்கி உள்ள நிலையில் நாட்டை விட்டே பறந்து சென்று இங்கிலாந்து நாட்டிலும் அவருக்குச் சொந்தமாக உள்ள 2 ஏக்கர் பங்களா வீட்டில் பவிசாக வாழ்கிறார். இவர்தான் திருப்பதி வெங்கடாசலபதிக்கு ரூபாய் 1 கோடிக்கு மேல் பெறுமானமுள்ள தங்கக் கிரீடம் காணிக்கை கொடுத்தார்.

ஆனால், ஏழை விவசாயி 3.80 லட்சம் உழவு ஊர்தி (டிராக்டர்) வாங்கிய கடனுக்கு இன்றுவரை வட்டியும் அசலுமாக 4.80 செலுத்திவிட்ட நிலையில் மீதி தொகையை தற்போது வயலில் உள்ள மகசூலை அறுவடை செய்து கட்டிவிடுகிறேன் என்று சொன்னதைக் கேட்காமல் வங்கி அலுவலர்களும், காவல் துறையும் அவரை சரமாரியாகத் தாக்கி கொடுமை செய்ததால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டதையும் ஒப்பு நோக்கும்போது சட்டத்தின் கருணையும், அதில் உள்ள ஓட்டைகளும் யாருக்குச் சாதகமாக உள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளதன்றோ.

விஜய் மல்லையாவின் 9000 (ஒன்பதாயிரம் கோடி) கடனை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு ஒப்புமை காட்டியுள்ளதைப் பார்த்தால் மிகவும் வேதனையே மிஞ்சும்.

1.    நாட்டுக்காக தன்னுயிரையே ஈகம் செய்யத் துணிந்து இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் நீண்ட நாள்களாக ஒரே தகுதியுள்ள பதவி வகித்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் சமமான ஓய்வூதியம் வேண்டி போராடி வருகின்றனர். அவர்களுக்கு அப்படி வழங்கினால் அரசுக்கு ஏற்படக்கூடிய அதிகப்படியான செலவு ரூ.8,000 கோடி மட்டுமே. மல்லையாவின் கடனோ ரூ.9,000 கோடி.

2.    பா.ஜ.க. அரசு தன் 2016_17 ஆண்டு வரவு செலவு திட்டத்தில் (ஙிuபீரீமீt) உயர்கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.28,840 கோடியில் மூன்றில் ஒரு பங்கு மல்லையாவின் கடன் ஆகும்.

3.    காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.70,000 கோடியில் 8இல் ஒரு பங்கு மல்லையாவின் கடன் ஆகும்.
ரூபாய்   
(கோடி)

4.    விண்வெளி ஆய்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது    7,509.1

5.    சமூகநீதி அமைச்சகத்துக்கு (Social Justice and Empowerment)    7.344.5

6.    தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு    6,242,6

7.    நீர் ஆதாரம், ஆறுகள் மேம்பாடு, கங்கை தூய்மைதிட்ட
அமைச்சகத்துக்கு    6,201.2

8.    சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு    5,411.4

9.    வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்துக்கு    5,411.0

10.    புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் அமைச்சகத்துக்கு    5,305.8

11.    பழங்குடியினர் அமைச்சகத்துக்கு    4,826.5

12.    சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலைமாற்ற அமைச்சகத்துக்கு    2,250.3

13.    திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்துக்கு    1,804.3

14.    இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு    1,592.0     மேலே குறிப்பிட்ட 4 முதல் 14 வரை உள்ள அமைச்சகங்களுக்கு தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ள தொகையைவிட மல்லையாவின் 9,000 கோடி கடன் தொகை மிக அதிகமாக உள்ளதைக் காணலாம்.

இவை தவிர (Hydrabad International Airport
Authority) அய்தராபாத் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு கொடுத்த 2 கோடி ரூபாய்க்கான போலி காசோலை வழக்கில் பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(Airport Authority of India) இந்திய விமான நிலைய நிறுவனத்திற்கு ரூ. 294.57 கோடிகள் மல்லையா பாக்கி வைத்திருப்பதாக விமான நிலையங்களின் (KingFisher) அமைச்சர் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்துள்ளார். இதற்காக மல்லையாவின் (King Fisher) கிங்பிஷர் நிறுவனத்தின்மீது மும்பை நீதிமன்றத்தில் 2014இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இன்னும் இந்த ‘யோக்கியர்களின்’ செயல்பாடுகளைக் கிளறக் கிளற எத்தனை, எத்தனை கோடி ஏமாற்றுதல்கள் வெளிவருமோ தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஓடிச்சென்ற 2.3.2016 நாளுக்கு முன்னாள் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்துப் பேசியுள்ளார் என்பதும் அவர் பறந்து செல்வதற்கு சர்வதேச உளவாளி சுப்ரமணிய சுவாமி உதவியுள்ளார் என்ற தகவல்களும் இன்றைய அரசின் பார்ப்பனத் தன்மையை பறைசாற்றுவதாகவே உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *