சொன்னது சொன்னபடி

மார்ச் 16-31

திமுக கூட்டணிக்கு அதிமுக வை எதிர்போர் வரவேண்டும்

நேபாள உள்விவகாரம் இந்தியாவை இழுக்காதீர்!

நேபாளத்தில் அமல்படுத்தப்-படும் புதிய அரசமைப்புச் சட்டத்தால் தாங்கள் பாதிக்கப்-படுவதாக இந்தியப் பூர்வீகக் குடிகளான மதேசிகள் என்னிடம் முறையிட்டனர். இப்பிரச்சினை முழுக்க முழுக்க நேபாளத்தின் உள்நாட்டுப் பிரச்சினை. அதில், இந்தியா தலையீடு கூடாது என்று கூறிவிட்டேன்.
-நிதீஷ்குமார், பீகார் முதல்வர்

நீதிபதியின் எண்ணத்தை அறிவதில்தான் வழக்குரைஞரின் வெற்றி உள்ளது!

ஒரு நீதிபதியைத் திருப்திப்-படுத்துவது தனிக்கலை. நீதிபதியின் உள்ளத்தில் உள்ள சந்தேகங்-களுக்கு உகந்த பதில் கிடைக்க-வில்லை யென்றால் வழக்குரைஞரின் வாதம் முழுவதும் பயனற்றதாகிவிடும். எனவே, நீதிபதியின் எண்ணத்தை அறிந்து அவரைத் திருப்திப்படுத்தும் வகையில் வாதங்களை வைப்பதில்தான் வழக்குரைஞரின் வெற்றி உள்ளது.
– சஞ்சய் கிஷன் கவுல்,

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

தமிழகத்தில் எப்போதும் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது
ஹிந்துமத வெறியை முன்னிறுத்தி பா.ஜ.க.வால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அதனால் அடித்தட்டு மக்களிடம் தொடர்புள்ளவர் கைப்பிடித்து தேர்தலைச் சந்திக்க முயற்சிக்கின்றனர் தமிழகத்தில் ஒருபோதும் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது!
-து.இராசா,இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர்

என் கேள்விக்கு என்ன பதில்?

75 நிமிடங்கள் மோடி பேசினார். அப்போது, என்னைத் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டினார். எப்படி வேண்டுமானாலும் என்னை விமர்சிக்கட்டும். பிரதமர் என்பதால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. அதே நேரத்தில், “இந்தியாவில் தயாரிப்போம்’’, கருப்புப் பண பதுக்க்கல்காரர்கள் பற்றி நான் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவர் பதில் என்ன?
– ராகுல் காந்தி, காங். துணைத் தலைவர்

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்புடன் மீண்டும் வேலை.
-மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர்

தி.மு.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. அல்லாத கட்சிகள் வரவேண்டும்!

அ.தி.மு.க.வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் தி.மு.க._காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும். கூட்டணி அமையும் முன்பே ஆட்சியில் பங்குபற்றிப் பேசக் கூடாது. அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
-பழ.கருப்பையா

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது!

இழப்பில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து சீர்படுத்த வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது.
-இராஜேந்திரதேவ், ஏஅய்பிஓசி தலைவர்

மருத்துவத்துறையில் ஆராய்ச்சி வளர வேண்டும்!

ஆராய்ச்சியில் ஈடுபடும் மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ளது. எனவே, வளர்ந்த நாடுகளைப் போன்று மருத்துவக் கல்வி பயிலத் தொடங்கும்போதே மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.
-டாக்டர் சௌமியா சாமிநாதன், தலைமை இயக்குநர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *