குஜராத்தில் மோடியின் நிலமோசடி!
இலங்கையில் தமிழர்களுக்குச் சம உரிமை வேண்டும்
இலங்கையில் புதிய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் செயல்படுகிறது. தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும். தமிழரிடமிருந்து பறித்த நிலங்களை மீண்டும் உரியவர்களிடம் கொடுக்க வேண்டும். தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வகையில் அரசியல் சாசனச் சட்டம் அமைக்கப்பட வேண்டும். தமிழர்கள் இரண்டாந் தரக் குடிமக்களாய் நடத்தப்படும் நிலைமாறி அவர்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும். தமிழர் மொழி, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கு சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்ற்றிற்குத் தேவையான வழிகாட்டலை இந்தியப் பிரதமர் மோடி வழங்க வேண்டும்.
– கலைஞர் மு.கருணாநிதி, தலைவர், தி.மு.க.
விரைவில் இந்தியா – பாக். பேச்சு தொடங்கும்!
பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். எனவே, அதை ஒழிப்பதில் பாகிஸ்தானைவிட வேறு எந்த நாட்டிற்கும் அதிக அக்கறை இருக்க முடியாது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் பேசித்தான் தீர்க்க இயலும். எனவே, இந்தியா-_பாகிஸ்தான் இடையில் விரைவில் பேச்சு தொடங்கும் என்று நம்புகிறேன்.
– நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமர்
குஜராத்தில் மோடியின் நிலமோசடி
குஜராத்தில் 2010இல் மோடி முதல்வராக இருந்தபோது, நில ஒதுக்கீட்டில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அனார் படேலுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு, குறைந்த விலையில் வனப்பகுதி நிலத்தை மோடி அரசு வழங்கியுள்ளது. தனது ஆட்சியில் ஊழலுக்கு சிறிதும் இடமில்லையென்னும் மோடி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
– ஆனந்த் சர்மா, காங்கிரஸ் மூத்தத் தலைவர்
காங்கிரஸை குறைகூறுவதை விட்டு, ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்
எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் கட்சியின் மீது குறை சொல்வதை நிறுத்திவிட்டு, ஆட்சி நிர்வாகத்தில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும். பிரதமரின் பணி-யென்பது நாட்டை நல்ல முறையில் ஆளுவதுதான்; சாக்கு-போக்கு சொல்வது அல்ல. எதைக் கேட்டாலும் 18 மாதங்களாக பிரதமர் சாக்கு போக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
– இராகுல்காந்தி, காங்.துணைத் தலைவர்
தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தச் சதி!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சர்வாதிகாரச் சிந்தனையுள்ளது. அருணாசலப் பிரதேசத்தைப் போல தில்லியிலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தச் சதித்திட்டம் தீட்டுகிறது.
– கெஜ்ரிவால், தில்லி முதல்வர்.
மோடி கூட்டத்தால் மாற்றமில்லை ஏமாற்றமே!
கோவையில் நடந்த மோடியின் கூட்டத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்று தமிழகப் பா.ஜ.க.வினர் கூறிவந்தனர். கூட்டம் முடிந்துவிட்டது. மாற்றம் வரவில்லை. ஏமாற்றம்தான் வந்துள்ளது.
– ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
மனித இனத்திற்கு கால்நடைப் புரதத் தேவை 26%
நாடு முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் 60லிருந்து 100ஆக உயர்த்தப்பட உள்ளது. உலக அளவில் மனித இனத்திற்கு 26% புரதமும், 13% எரிசக்தியும் கால்-நடைகளிலிருந்து கிடைக்கிறது. பெருகிவரும் வருவாய், நகர் வளர்ச்சிக்கு ஏற்ப கால்நடை புரதத்திற்கான தேவை அதிகரிக்கும். 2050இல் 50% அளவிற்கு தேவையை ஈடுசெய்ய வேண்டும்.
– எஸ்.சுரேஷ் ஹோன்னப்ப கோல், மத்திய கால்நடை பராமரிப்பு ஆணையர்