சட்டம்
¨ திருமணமாகி விட்டது என்று காரணம் காட்டி கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய மறுத்தது சரியல்ல!
¨ ஒப்பந்தத்திலிருந்து விலகினால் முன் வைப்புத் தொகை திருப்பி அளிக்க முடியாது என்று சொல்லப்பட்டிருக்கும் போது ஏலத்தில் பங்கேற்றவர் அதைக் கோரிப் பெற முடியாது.
¨ அரசுப் பணிக்கான வயது வரம்பை தளர்த்த உயர்நீதிமன்றம் மறுப்பு
¨ இந்தியா இன, மொழி, கலாச்சாரப் பின்னணி கொண்டிருந்த போதிலும் மக்கள் ஒற்றுமையாய் வாழ்கின்றனர். இந்நிலையில் வடக்கு, தெற்கு பாகுபாடு காண்பது தவறு.
¨ வாடகைதாரர் வேண்டுமென்றே வாடகைத் தொகை செலுத்தாமல் இருந்தாலோ; கட்டிட உரிமையாளரின் சொந்த உபயோகத்துக்கு இடம் தேவை என்றாலோ வாடகைதாரரை வெளியேற்றலாம்.
¨ விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிரான குற்ற வழக்கு மற்றும் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரும் வழக்கு ஆகியவற்றில் தீர்வு காணும் முன்பு ஓட்டுநர் உரிமத்தை முடக்கி வைத்தது சரியல்ல.
¨ அரசின் சுற்றறிக்கை செல்லாது என்று நீதிமன்றம் தீர்வு கண்ட நிலையில் அதே சுற்றறிக்கையின் அடிப்படையில் அரசு ஊழியருக்கெதிராக வழங்கப்பட்ட குற்றச்சாட்டுக் குறிப்பாணை செல்லாது.
¨ குடும்பப் பெண் தனது குடும்பத்துக்கு ஆற்றும் பணி மிகச் சிறந்தது. விபத்தின் காரணமாக இளம் வயதில் இறந்தால் அவரது இடத்தை இட்டு நிரப்புவது கடினம். இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படுகிறது.
¨ மேல்முறையீட்டில் தீர்ப்பாணைக்கு இடைக்காலத் தடையாணை பிறப்பிக்காத-போது நிறைவேற்றுகை மனுவுக்கும் தடையில்லை.
¨ சொத்தின் உரிமை மூலம் பற்றிய பிரச்சினைக்கு உரிமையியல் நீதிமன்றம் முன்புதான் தீர்வு காண வேண்டும்.
¨ உயில் சட்டரீதியாக செல்லத்தக்கது என்று நிரூபிக்க வேண்டுமாயின் அதில் சாட்சிக் கையொப்பம் இட்டவரை விசாரிக்க வேண்டியது கட்டாயம். (சொத்து இறக்கச் சட்டம் 1925 பிரிவு 63 (சி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 விளக்கப்பட்டது)
¨ நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்வதற்கு கால வரையறை நிர்ணயம் செய்து சட்டமன்றங்களால் சட்டம் எதுவும் இயற்றப்படாத சூழ்நிலையில், அவை ஓராண்டு கால அவகாசத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
¨ விருப்ப ஆவணத்தை (உயில்) நிறைவேற்றுகை செய்யும் அதிகாரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு.
¨ தேவை கருதி உத்தரவு நகல், தீர்ப்பாணைக் கட்டளை ஆகியவற்றில் திருத்தம் செய்யலாம்.
¨ அதிகாரிகள் அரசியல்வாதிகள் சேர்த்த ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் _ உச்சநீதிமன்றம்.
¨ வாதிகளுள் ஒருவர் மட்டும் மனுகொடுத்து வழக்கை மீளப் பெற முடியாது.
¨ நிறுவனத்தின் சட்டப்பூர்வ சிற்றுண்டிச் சாலைப் பணியாளர்களும் நிறுவனத்தின் பணியாளர்களாகக் கருதப்படுவர்.
¨ கூட்டாண்மையில் தன்னிச்சையாக பொதுவரை நியமிப்பது சட்டத்திற்கு எதிரானது.