உடலுறவு முடிந்ததும் பெண் உட்காரக் கூடாது
குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண்கள் உடலுறவு முடிந்ததும் எழுந்து உட்காரவோ, நடக்கவோ கூடாது. உடலுறவின்போது ஆணின் விந்து பெண்ணுறுப்பில் செலுத்தப்பட்டதும், விந்துவிலுள்ள அணுக்கள் கருப்பையில் உள்ள சினைமுட்டையுடன் சேர போட்டியிட்டு ஓடும். ஓடி ஏதாவது ஒன்று சேர்ந்தால்தான் ஆண்குழந்தை அல்லது பெண்குழந்தை உருவாகும். அவை விரைந்து ஓட வேண்டும் என்றால், பெண் உடலுறவு முடிந்த பின் மல்லாந்து படுத்திருக்கும் அதே நிலையில் 20 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். உடனே எழுந்து உட்கார்ந்தால், விந்தணுவின் விரைவான ஓட்டம் தடைபட்டு, கருத் தரிப்பது நிகழாமல் போகும். இதைப் பெண்கள் கருத்தில் கொண்டு செயல்பட வெண்டும். மாதவிலக்கு வந்த 12-ஆம் நாளிலிருந்து 15 ஆம் நாள் வரை நான்கு நாள்கள் தினம் உடலுறவு கொண்டால் கட்டாயம் கருத்தரிக்கும். இதை அறியாது இந்த நாள்களில் உடலுறவு கொள்ளாது போனால் கரு உருவாகாது. மற்ற நாள்களில் கொள்ளும் உடலுறவு உடல் சுகத்துக்கு மட்டுமே உதவும்.
பனிக்காலத்தில் காரம், உப்பு, புளி அதிகம் சாப்பிடக் கூடாது:
பனிக்காலத்தில் அதிகம் பசிக்கும். காரம், உப்பு, புளி இன்னும் பசியைத் தூண்டும். எனவே, இவற்றைக் குறைத்து, இனிப்புச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு என்பது குடலுக்குள் செல்லும் போது இனிப்பாக இருக்கக்கூடிய இனிப்பு சாப்பிட வேண்டும். தேன் இனிப்பு. ஆனால், அது குடலுக்குள் சென்றதும் காரமாகும். எனவே, அது உகந்ததல்ல. பச்சைப்பயிறு, கோதுமை, அரிசிப் பொருள்கள், வெல்லம் சேர்த்து உண்பது சிறந்தது, பூசணி, குளிர்பானங்கள் கூடாது.
பனிக்காலத்தில் ஏ.சி. கூடாது:
பனி மற்றும் குளிரின் பாதிப்பை ஏ.சி. இன்னும் கூட்டும். எனவே, ஏ.சி. தலைபாரம், மூக்கு ஒழுகுதல் உண்டாக்கும் மூளை நரம்புகளைப் பாதிக்கும். சிலருக்கு முகவாதம் ஏற்படும்.
ஆசைக்கு உண்பதும், வாங்குவதும் கூடாது:
ஆசைக்கு உண்பது உடல் நலக்கேடு; ஆசைக்கு வாங்குவது பொருளாதாரக் கேடு. எனவே, உண்பதும், வாங்குவதும் தேவைக்கு இருக்க வேண்டுமே தவிர, ஆசைக்கு இருக்கக்கூடாது. விதவிதமாக 10 செருப்பு, டிசைன் டிசைனாக 100 புடைவை, பல வகை கார்கள் இவையெல்லாம் போலியான பெருமைகளேயன்றி உண்மையில் சிறப்பல்ல.
உணவை வீணாக்கக் கூடாது:
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, நமக்கு எது, எந்த அளவிற்குத் தேவையோ அந்த அளவிற்கு மட்டும் பெற்று உண்ண வேண்டும். தேவையில்லாததை வாங்கி, குப்பையில் சேர்ப்பது மனித இனத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம். பெரியவர்கள் பிள்ளைகளுக்கு இதைச் சொல்ல வேண்டும்.
யோசனை கேட்டுச் செல்வோரிடம் நம் யோசனையை முதலில் சொல்லக்கூடாது:
நாம் ஏதாவது ஒரு சிக்கலிலிருந்து மீள என்ன செய்யலாம் என்று பிறரிடம் யோசனை கேட்கும் போது முதலில் நம் கருத்தை (யோசனையை) அவர்களிடம் சொல்லக்கூடாது. அவ்வாறு சொன்னால் அவர்கள் சிந்தனையும் நம் கருத்தையொட்டியே செல்லும். எனவே, நமது சிக்கலை மட்டுமே பிறரிடம் சொல்லி இதற்கு என்ன செய்யலாம் என்று அவரிடம் யோசனை கேட்க வேண்டும். அப்போது அவர் அதற்கான தீர்வு குறித்து அவர் நோக்கில் சிந்தித்து ஒரு தீர்வு சொல்லுவார். அப்போது நம் யோசனையை அவரிடம் சொன்னால், தற்போது இரு யோசனைகள் கிடைக்கும். இந்த இரண்டையும் பரிசீலித்து. எது ஏற்றது என்று சிந்தித்தால், இன்னும் சில புதிய யோசனைகள் பிறக்கும். அவற்றுள் எது சிறந்ததோ, ஏற்றதோ அதைச் செயல்படுத்தினால் சிறப்பான தீர்வு கிடைக்கும்.
யோசனை கேட்பதில் இன்னொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். யாரிடம் எதைப் பற்றி யோசனை கேட்கலாம்; கேட்கக்கூடாது என்று முன்கூட்டியே தீர்மானித்துக் கேட்க வேண்டும். சொல்லக் கூடாதவர்களிடம் சொல்லி எதிர்காலத்தில் சிக்கலை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அடுத்தவரிடம் சொல்லக் கூடாத சிக்கல்களில் நாமே பலமுறை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அல்லது நம்பிக்கைக்குரிய நலம் விரும்பிகளிடம் கேட்க வேண்டும். ஸீ