சாதிப்பாகுபாட்டுடன் கூடிய சுதந்திரம் கேலிக் கூத்தானது

ஜனவரி 16-31

நூல்: தவத்திரு தர்மதீர்த்த அடிகளாரின் ‘இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு’
ஆசிரியர்: மலையாளத்திலிருந்து தமிழில்: வெ.கோ.பாலகிருஷ்ணன்
நூல் வெளியீடு: சாளரம்,
348 – எ.டி.டி.கே.சாலை,
இராயப்பேட்டை, சென்னை-600 014.
விலை: ரூ. 120/-   பக்கங்கள்: 272

உலகில் உள்ள எந்த நாட்டையும்விட அதிகமான ஞானிகளையும் சீர்திருத்தவாதி-களையும் ஆசிரியர்களையும் இந்தியா பார்த்துவிட்டது. இந்தியாவுக்கு என்று தனித்த எதிர்பார்ப்புகளும் உன்னத நம்பிக்கைகளும் உள்ளன.

இவையெல்லாம் இந்தியாவைக் காப்பாற்றிவிடவில்லை. உள்நாட்டு சுரண்டல்காரர்களாலும் புரோகிதர்களாலும் வழிநடத்திச் செல்லப்பட்ட இந்துக்கள் தேசியத் தற்கொலைக்கே இட்டுச் செல்லப்பட்டனர். புதிய கருத்துகளுக்கு ஏற்றபடி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளத் தேவையான கல்வி அறிவை இந்துக்களுக்கு அளிக்காமல், உன்னத இலட்சியங்களையும் திட்டங்களையும் பற்றி தலைவர்களும் சோஷலிசவாதிகளும் பேசிக் கொண்டிருக்-கின்றனர்; நாட்டில் நிலவும் வேற்றுமைகளைக் களைந்தெறிய முயற்சி செய்யாமல் வேதாந்தம் பேசும் தலைவர்கள் எந்த விதத்திலும் மாறுபட்டு நிற்கவில்லை. மதம் மற்றும் சாதிக் கலாச்சாரத்தில் ஊறி ஏமாற்றங்களுக்கும் சுரண்டலுக்கும் இந்து மக்கள் தங்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும்வரை எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. இவற்றை விட்டொழித்தால் தவிர, உண்மையான சுதந்திரத்தைப் பெற முடியாது என்று சொல்லும் மனத்துணிவு நம் சோஷலிசத் தலைவர்களுக்கு இல்லை. அதற்கு நேர்மாறாக, இந்து மத பண்பாடு, கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கும் சோஷலிசத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் அவை அனைத்தும் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் தொடரும் என்றும் நம்பி தலைவர்கள் உறுதிமொழியை மக்களுக்கு அளிக்கின்றனர்.

மற்றவர்களோ புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, மதத்தின் பெயராலும் சாதி அடிப்படையிலான பணி, பொருளாதாரத் திட்டம், பொருளாதாரத்தில் பாரம்பரியத்தின் பங்கு, முதலாளித்துவ கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் மேற்கூறிய வேறுபாடுகள் தொடரும் என்று கூறிவருகின்றனர்; இந்த லட்சணத்தில் இந்தத் தலைவர்கள் தங்களைத் தேசியவாதிகள் என்றும் சோஷலிசவாதிகள் என்றும் மார்தட்டிக் கொள்கின்றனர்.

இந்தத் தலைவர்களைத் தவிர்த்து, ‘இந்தியாவின் உன்னதக் கலாச்சாரம்’ போற்றத்தக்கது என்று கூறிக்கொள்ளும் தலைவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்; இவர்கள் வங்காளக் கலாச்சாரம், பஞ்சாப் கலாச்சாரம், மராட்டியக் கலாச்சாரம், ஆந்திரக் கலாச்சாரம், தமிழ்க் கலாச்சாரம், கேரளக் கலாச்சாரம் என்று மாநில வாரியான கலாச்சாரங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதிகளையும் சாதிப் பிரிவினைகள் ஏற்படுத்தும் கொடுமை-களையும் தவிர்த்து இந்தக் கலாச்சாரங்-களில் என்ன உன்னதம் இருக்கிறது என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம். இவ்வாறு இருக்கும் தனித்தனியான கலாச்சாரம் என்பது திருமணம், உண்ணுவது, குடிப்பது, மூடநம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றின் மூலம் மக்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி தனித்தனிக் குழுக்களாகச் செயல்பட உதவுகிறதே ஒழிய, தேச விடுதலைக்கோ ஒற்றுமைக்கோ எந்த விதத்திலும் உதவவில்லை. இதுதான் தேசியம் என்றால் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் போட்டு மிதித்துத் திணறச்செய்யும் தேசியத்திலிருந்து விடுதலை வேண்டும் என்று தேசம் கதறியழலாம். சூழலைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால் தேசியவாதிகள் என்றும் சோஷலிசவாதிகள் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் பலரும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களாகவும் சாதியவாதிகளாகவுமே இருக்கின்றனர். இந்து ஏகாதிபத்தியச் சூழலிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் வேறு எப்படியும் இருக்க முடியாது; இவர்கள் சாதியத்திலும் பிராமணியத்திலும் ஊறியவர்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டால் நாட்டில் வன்முறை இருக்காது. அரிஜனங்கள் தளைகளிலிருந்து விடுவிக்கப்-பட்டுவிடுவார்கள். மனிதன் பிறப்பிலிருந்தே சமமாக நடத்தப்படுவான், சுரண்டல் தவிர்க்கப்பட்டுவிடும், மனிதாபிமான அடிப்படையில் மத ஒற்றுமை மற்றும் தேச ஒற்றுமை நிலவும் என்றெல்லாம் மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்கள் நம்பினால் அது தவறு. இந்தக் கண்ணோட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவில்லை. மகாத்மா காந்தியின் மேல் மக்கள் வைத்திருக்கும் அபரிதமான நம்பிக்கை உண்மை என்று எடுத்துக்கொண்டால் அதற்குத் தகுந்தாற்போல் அரிஜனங்களின் விடுதலை, கோயில்களில் எல்லா சாதியினரும் நுழைதல், இந்து_ இஸ்லாமிய ஒற்றுமை, கதர் நூற்றல் மற்றும் கதர் அணிதல் போன்றவற்றில் மக்கள் ஈடுபாடு காட்டியிருக்க வேண்டும். நாடு இக்கட்டான சூழலில் இருப்பதால் மேம்போக்கான ஆர்வமே மக்களிடம் காணப்படுகிறது. அதிக நம்பிக்கையும் விளம்பரத்துக்குப் பணமும் இருந்தபோது மக்களிடம் ஓரளவுக்கு ஆர்வம் இருந்தது. தேசியத்தை உருவாக்கும் திட்டங்கள் ஓரளவுக்கே முன்னேற்றமடைந்துள்ளன. இந்து மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியாத தோல்வியே நம் தேசிய வாழ்வில் உள்ள பலவீனமான விஷயமாகும்.

மனித இனத்திலேயே நாம் தனித்தவர்கள், உயர்ந்தவர்கள் என்ற மாயையைத் தூக்கியெறிவதே இன்றைய முக்கியத் தேவையாகும். ஜெர்மன் மக்களைக் குறித்த இதுபோன்ற மாயையே ஜெர்மன் தத்துவவாதிகள் உருவாக்கினர். உலகை ஆக்கிரமிக்கப் பிறந்த உயர்ந்த இனம் ஜெர்மானியர்கள் என்ற எண்ணமே ஹிட்லரை அய்ரோப்பா முழுதும் தாக்கி அழிக்கச் செய்தது. எவ்வாறு தன் இன மேன்மையை நிலைநாட்ட ஹிட்லர் எல்லாவிதக் கொடுமையான வழி-முறைகளைப் பின்பற்றினானோ அதுபோலவே தங்களை உயர்ந்தவர்-களாகவும் உயர்ந்த கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாகவும் கருதிக் கொள்-பவர்கள் தங்களிடம் அதிகாரம் வரும்போது அதை நிலைநாட்ட எல்லாவிதமான அக்கிரமங்-களையும் கலாச்சாரம் என்ற பெயரால் செய்யத் தயங்க மாட்டார்கள். இந்துக்களின் கையில் சுதந்திரத்தையும் தேவைப்படும் அதிகாரத்தையும் கொடுத்துப் பாருங்கள்; தங்கள் சாதி, கலாச்சாரம், பண்பாடு, வேதச் சடங்குகள் ஆகியவற்றைத் தூக்கிப்பிடிக்க மற்ற எல்லோரையும் விட அதிக அளவில் ஆக்ரோஷமாகவும் ஏகாதிபத்திய உணர்வோடும் செயல்படுவார்கள்; இதுதான் ‘உன்னத இந்து பண்பாடு’ என்று நிரூபித்துக் காட்டிவிடுவார்கள். மனித உரிமைகளை மறுக்கவும் இரத்த ஆறு ஓடும் போர்களை நியாயப்படுத்தவே பகவத்கீதையும் மற்ற புனித நூல்களும் பயன்படுத்தப்படும். சாதிக் கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கும் இந்து மத இந்தியாவுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் கிடைத்தால் அது கலாச்சாரத்துக்கும் உலக அமைதிக்கும் தீங்கையே ஏற்படுத்தும். எல்லா விதத்திலும் நாம் உலகில் உள்ள மற்ற மக்களைப் போலத்தான் இருக்கிறோம் என்ற உண்மையை எவ்வளவு சீக்கிரம் உணர்ந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு அது நமக்கும் இந்த உலகுக்கும் நல்லது.

நம் தேசிய வாழ்வு என்பது மற்ற தேசங்களின் வாழ்விலிருந்து மாறுபட்டது அல்ல. நாமும் மற்ற மக்களைப் போலவே உணர்வுகளாலும், நோக்கங்களாலும், இலட்சியங்களாலும், கொள்கைகளாலும் கவரப்பட்டிருக்கிறோம். பல்வேறு நிலைகளில் வாழ்வை ஒழுங்கமைத்துக்கொள்ள ஒரே மாதிரியான வழிமுறைகளையே பின்பற்று-கிறோம். எல்லா நாட்டு மக்களைப் போலவும் நம்மிடம் இருந்த அதிகாரத்தைச் சரியான முறையிலும் தவறான முறையிலும்  பயன்படுத்தியிருக்கிறோம். எல்லா நவீன நாடுகளைப் போலவும் அறிவியல், மதம், பொருளாதாரம், தொழில்துறை, அரசியல், மற்ற துறைகள் ஆகியவற்றில் நம்மை நெருக்கமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம்; அது போலத்தான் நன்மை செய்வதிலும் தீமை விளைவிப்பதிலும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மற்ற நாடுகளைப் போல அல்லாமல் நன்மை செய்வதைவிட தீமைகளை அதிகமாகச் செய்திருக்கிறோம். நமக்குத் தேவைப்படுவது உன்னதமான பிரிவினை மனப்பான்மை அல்ல. நாம் மனித இனம் என்பதின் ஒரு பகுதி என்பதையும், மற்றவர்களைப் போலவே மதத்திலும் அரசியலிலும் உள்ள கொள்கைகளின்படி வழிநடக்க வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்வது நல்லது. உலக நன்மைக்கு நம்மால் நிறைய செய்ய முடியும் என்பதில் அய்யம் இல்லை. ஆனால், அவ்வாறு செய்யாதபோது, அதைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆனால், அவ்வாறு உலக நன்மைக்கு நம்மாலானதைச் செய்யும்போதோ அல்லது செய்ய முயலும்போதோ நாம் நிச்சயமாக உலகத்தின் கவனத்தைக் கவர்வோம். ஆனால், நம்முடைய சிறப்பு என்பது இராவணன் அல்லது ஹிட்லரைப் போல நடந்துகொள்வதில்தான் உள்ளது. வாழ்வுக்கும் மதத்திற்கும் முரணான நியாயமற்ற சாதிப் பாகுபாடு, பிராமணியச் சடங்கு போன்றவற்றைக் கடுமையாகப் பின்பற்றுவதிலும் உன்னதத்தைக் காண்கிறோம்; புனிதமான மனித உணர்வுகளை நோகடிப்பதிலும் சக மனிதர்களைக் கேவலப்படுத்துவதிலும் உன்னதத்தைக் காண்கிறோம்.

இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த யூதர்களைவிட கொடுமையான இதயம் படைத்தவர்களாகப் பல நூற்றாண்டுகளாக விளங்கும் நாம், சுயராஜ்ஜியத்தை அடையும் திட்டத்திற்கு அடிப்படையாகப் பழங்கால ரிஷிகளின் போதனைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்த இலாபமும் இல்லை. கடும் தோல்விகளைச் சந்தித்த சில புதிய மேற்கத்திய நாடுகள்கூட வேதங்களிலும் மற்ற மதங்களிலும் உள்ளவற்றை அறிய ஆத்மார்த்தமாக முயற்சி செய்து வருகின்றன. ஆனால், இந்து முதலாளிகள் இன்னும் சாமர்த்தியமாக நடந்து கொள்ள முயல்கிறார்கள். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அடிமைப்படுத்தப் பட்டும் ஏமாற்றப்பட்டும் சுரண்டப்பட்டும் வரும் மக்களுக்கு அடிப்படை மனித கவுரவத்தை அளிப்பதற்கு மதம் மற்றும் அறிவியலின் பெயரால் இந்து முதலாளிகள் மறுக்கிறார்கள். இந்து பண்பாட்டைப் பற்றிப் பேசும்போது இந்துக்கள் தங்களை உயர்வாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி நியாயப்படுத்த தற்கால இந்துக்களிடம் எந்த முகாந்தரமும் இல்லை. “இந்து மதம் என்பது சகிப்புத்தன்மை உடையது; கத்தோலிக்க மதம் என்பது வெறும் வெற்று வார்த்தைகள். உண்மையான வாழ்க்கையில் நெகிழ்வுத் தன்மை இல்லாததாகவும் குரூரமானதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் உள்ளது’’ என்று சர்.பி.சி.ரே கூறினார். பெரும்பான்மை இந்து பழமைவாதிகளைப் பொருத்தவரையில் மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர் போன்ற மகான்களும் ஞானிகளும்கூட தீண்டத்-தகாதவர்கள் தான். பாரம்பரிய நடை-முறைகளைக் குறைசொன்னால் இவர்களையும் தூக்கியெறிந்து விடுவார்கள். அருவருப்பான இந்து வாழ்க்கையையும் கொடூர மனம் படைத்த இந்து முதலாளிகளையும் மறைக்கவே பழங்கால நூல்கள் மற்றும் கோட்பாடுகளின் உதவியோடு தங்கள் நாகரிகமும் பண்பாடும் உயர்ந்தது என்று சொல்லிக்கொண்டு தந்திரமாக நாடகம் ஆடுகிறார்கள். இந்த நாடகத்தை நாம் துணிவோடு நிறுத்தியாக வேண்டும். நம் சாதனைகளை எண்ணி பெருமிதப்படுவதற்கு முன்னால், நாமும் மற்ற மக்களைப் போல நாகரிகமானவர்களாக மாறவேண்டும்.

வேறு உருவத்தில் பிராமண ஏகாதிபத்தியம் உருவெடுக்கும் ஆபத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்துக்களை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தைக் கற்பனை செய்துபாருங்கள். காந்தி கிலாபத் போராட்டத்தைத் தொடங்கிய போது ‘சாதி என்பது ஒரு அமைப்பு’ என்று வெளிப்படையாகக் கூறினார்; பிறகு தன் நிலையை மாற்றிக் கொண்டார். ஆனால், மற்ற இந்துத் தலைவர்கள் மாறவே இல்லை. அகில இந்திய வர்ணாசிரம சுயராஜ்ஜிய சங்கத்தின் தலைவர் கும்பகோணத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது (மெட்ராஸ் மெயில், மே, 1940), “சாதிப் பாகுபாடு இல்லாத சுயராஜ்ஜியம் என்பது ஆன்மா இல்லாத உடலுக்குச் சமம்’’ என்று கூறினார். ‘சாதி’ என்பதுதான் இந்து மதத்தின் ஆன்மா என்று கருதும் ஆயிரக்கணக்கான இந்துத் தலைவர்களில் இவரும் ஒருவர். பிராமணரான சர்.எஸ்.இராதாகிருஷ்ணன், தத்துவவாதியாக பேசும்போது சாதி, நான்கு வர்ணங்கள் ஆகியவற்றை நியாயப்படுத்தும் விதமாக பல இனங்களையும் இணைக்க வேண்டும். கலாச்சாரங்களுக்கு இடையில் நல்லுறவு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சாதியும், நான்கு வர்ணங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. “இவை இந்து மனத்தின் கட்டுக்கோப்பான தன்மையை வெளிப்படுத்துகின்றன’’ என்று கூறினார்.

இந்திய வரலாற்றைப் பார்த்தோமானால் எப்போது சாதிப் பிரிவு வழக்கத்துக்கு வந்ததோ அதன் பிறகே ஒடுக்குமுறையும் சகிப்புத்தன்மை இன்மையும் தோன்றியது எனலாம். நம் நாடு முழுதும் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்ட இந்தச் சாதிப் பிரிவுகளே சுரண்டலுக்கும் வழிவகுத்தது. அந்நியரான ஆங்கிலேயரை எதிர்ப்-பதிலாவது இந்துக்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயல்படுகின்றனர். அதே நேரத்தில் சுயராஜ்ஜியத்தை அடைந்து-விட்டால் இந்துக்கள் ஒற்றுமையில்லாத பல குழுக்களாகப் பிரிந்துவிடுவார்கள்; சாதி ஏகாதிபத்தியம் வெற்றிபெறும்; இந்துக்கள் இடையிலான பிரிவினையை இஸ்லாமியர்-கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள். அந்தத் தருணத்தில் ‘சாதிதான் இந்துமதத்தின் ஆன்மா’ என்று கருதும் இந்து ஏகாதி-பத்தியவாதிகள் இஸ்லாமியருடனோ அல்லது வெளி நாட்டினருடனோ ஒன்றுசேர்ந்து சக இந்துக்களின்மீது சாதியெனும் நுகத்தடியை மாட்டி அடிமைப்படுத்த முனைவார்கள்; இந்தியா தற்போது உள்ள அடிமைப்பட்ட நிலையை மீண்டும் அடையும். சாதிப் பாகுபாட்-டோடு பெறும் சதந்திரம் கேலிக்கூத்தாக இருக்கும். சாதிய பாகுபாட்டோடு பெறும் சுதந்திரம் கேலிக்கூத்தாக இருக்கும். சாதிய முதலாளிகளின் கைப்பாவைகளாக இருக்கும் பெரும்பான்மை இந்துக்கள் தங்கள் உயர்ஜாதி முதலாளிகளின் கீழ் சுதந்திரமாக இருப்பதைவிட அந்நியர் ஆட்சியில் அடிமையாக இருப்பது எவ்வளவுமேல்.

சாதி மேலாண்மையைவிட ஏகாதி-பத்தியம் எவ்வளவோ மேல். இந்த உண்மையை நாம் அனைவரும் புரிந்து-கொள்ள வேண்டும். ‘சாதியா’ அல்லது ‘சுயராஜ்ஜியமா’ என்பதை இந்திய தேசம் முடிவு செய்துகொள்ள வேண்டும். இரண்டும் ஒருங்கிணைந்து இருக்க முடியாது. சுயராஜ்ஜியம் என்ற பெயரால் சாதி ராஜ்ஜியம் உருவாவதை இந்து பெரும்பான்மையினர் தடுக்க வேண்டும். காலங்காலமாக இந்து மக்களின் தலைவர்களும் புரோகிதர்களும் அவர்களை ஏமாற்றி வந்துள்ளனர். இப்படி ஏமாற்றி வந்தவர்களே இன்று அதிகாரத்திலும் இருக்கிறார்கள்; அதாவது காங்கிரஸ் கட்சி, சோஷலிச இயக்கங்கள், கோயில்கள், கிராமங்கள் போன்ற இடங்களில் தலைவர்களாக இருந்துகொண்டு ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மனதளவில் இன்னும் மாறவேயில்லை. உண்மையான சுதந்திரத்தை விரும்பும் இந்து மக்கள், தங்கள் தங்கள் மதத்தில் சுதந்திரமாக இருக்கும் கிறித்துவர்களையும் இஸ்லாமியர்களையும் போல இருக்க வேண்டும் என்று விரும்பினால் _ ஒரே குரலில் ‘சாதியோடு கூடிய சுதந்திரம் தேவையில்லை’ என்று குரலெழுப்ப வேண்டும். சுதந்திரத்தையோ சுயராஜ்ஜியத்தையோ வேண்டிப் போராடும் ஒவ்வொருவரும் ‘சாதியமைப்பை ஒழிப்போம் என்ற உறுதிமொழியை அளிக்கட்டும். ‘இந்தியா சுதந்திரம் பெற்றும் தன் குடிமக்களுக்குச் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் மறுக்க முடியாது’ என்ற உண்மையைச் சுதந்திரத்தை நாடும் இந்துக்களின் மற்றும் இந்திய தேசியவாதிகளின் மனத்தில் பதிக்க வேண்டும்.  தற்போது உள்ள சூழலில் சாதி ராஜ்ஜியத்தை மீட்டெடுப்பது என்பதே கொடுமையான செயலாகிவிடும். இதை எதிர்ப்பதில் சுதந்திரத்தை விரும்பும் மக்களாகிய இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் ஆகியோர் ஒன்றிணைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *