இருசக்கர வாகனங்களுக்கு வலுவான பூட்டு போட்டாலும், அவற்றைத் திருடுகின்றவர்கள் திறந்துவிடுகிறார்கள்.
இதைத் தடுக்க தற்போது புதிதாக ஒரு பூட்டை “லாக் 8′ என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்கள். இந்தப் பூட்டு, திருட்டில் இருந்து இருசக்கர வாகனங்களைப் பாதுகாக்கிறது.
இந்தப் பூட்டு, திருடர்கள் வாகனங்களைத் திருட முயலும்போது சத்தம் எழுப்புவதோடு, வாகன உரிமையாளரின் செல்லிடப் பேசிக்குத் தகவல் அனுப்பிவிடும். அதுமட்டுமல்ல, வாகனம் எங்கே இருக்கிறது என்பதை வாகன உரிமையாளரின் செல்போன் மூலம் தெரிவித்துவிடும். இந்தப் பூட்டின் எடை குறைவு. வண்டியின் பின்புறச் சக்கரத்தில் இதைப் பொருத்திக் கொள்ளலாம்.
இந்தப் பூட்டின் சாவியைத் தொலைத்துவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. காரணம், இந்தப் பூட்டுக்குச் சாவியே இல்லை. செல்பேசியில் பதிவு செய்யப்பட்ட மின்னணு குறியீட்டின் மூலம் இயக்கிக் கொள்ளலாம்.