தமிழ்ப்பெண் கனடாவில் நீதிபதி

ஜனவரி 16-31

தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை என்பவர், கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் – சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலத்தை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறிவர். வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992ஆ-ம் ஆண்டு சட்டக் கல்வியை வள்ளியம்மை முடித்தார். அதன்பின் அவர், 1995ஆ-ம் ஆண்டு முதல் வழக்கறிஞர் பணியைத் தொடங்கி பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

வழக்கறிஞர் தொழிலுடன் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் இவர் சட்டக்கல்வியைப் பயிற்றுவித்துள்ளார். இவருடைய சேவையைப் பாராட்டிப் பல்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்கி உள்ளன. இந்தியா_-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குநராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்படச் செய்துள்ளார் இவர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக வள்ளியம்மை நியமிக்கப்பட்டதன் மூலம், தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *