உண்மை ஆசிரியருக்கு வணக்கம்!
உண்மையில், பொதுநலம் பேணும் நாத்திகம் என்ற தலைப்பில், நியூயார்க் பெருநகர நாத்திகர் சங்கத்தைச் சேர்ந்த வி. இராமச்சந்திரன் அய்யா அவர்கள் எழுதியதை முழுவதும் படித்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது. அமெரிக்க நாட்டில் கரன்ஸி நோட்டில் கடவுளை நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருந்ததை நீக்குவதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதையும், பைபிளின் பெயரால் பதவி ஏற்கும் சம்பிரதாயத்தை நீக்கப் போராடுவதையும், 5 கோடிக்கு மேலான அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பதையும், தேவாலயங்கள் பிரிக்கப்படப் போவதையும், நாத்திகர்கள் சிறுபான்மையினர் எனும் நிலை மாறி, பெரும்பான்மையினராக உருவாகப் பாடுபடும் அமெரிக்க நாத்திக சங்கத்திற்கும் இந்தக் கட்டுரையை எழுதிய வி. இராமச்சந்திரன் அய்யாவுக்கும் எனது வாழ்த்துகள்!
நன்றி!
-ச. இரணியன், திருமுல்லைவாயல்
* * * * * * **
வணக்கம்.
உண்மை ஜூன் 1-15 2011 படித்தேன். அய். அய். டி.யில் அல்லல்படும் மாணவர்களின் அவலநிலையினைப் படித்தபோது கைக்கு எட்டியது…?
கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி ஈழத் தமிழ் உறவுகளின் விடிவிற்காக உரத்துக் குரல் கொடுக்கின்றதே, இரும்பு மனம் படைத்த இந்தியா? காண்டேகர் சிந்தனைத் துளிகள் அருமை.
1925 – இல் வைக்கம் வீரர் தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு அதன் தாக்கம் நாடு பூராவிலும் பரவியது.
குசராத், பீகார் ஆகிய மாநிலங்களின் அரசுகள் இந்த நூற்றாண்டில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக் கூடத் தொடங்கவில்லையே? அமெரிக்காவில் ஈழ முழக்கம்… இந்திய டில்லிக்காரனுக்குக் கேட்குதா? சின்ன குத்தூசி அவர்கள் வைத்திருந்த பெரிய குண்டே பெரியார் படம்தான்!! கலைஞரின் குட்டிக் கதைகள் நூல்படி சொர்க்கத்திற்கு வந்தது எப்படி? என்பது சிந்திக்க வைப்பது.
க. பழநிசாமி,
தெ.புதுப்பட்டி