உலகின் மிகப் பிரபலமான கடிகாரமான லண்டனில் உள்ள பிக் பென்னைப் பழுது பார்க்க ரூ.400 கோடி செலவாகும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற நிதிக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.
பிரிட்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிக்பென் கோபுரக் கடிகாரம் 1859_இல் அமைக்கப்பட்டது. அந்தக் கடிகாரத்தின் பாகங்களில் பழுது பார்க்கும் பணி நடைபெறவுள்ளது. இதற்கான செலவு ரூ.50 கோடி என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால் அந்தக் கடிகாரத்தின் செயல்பாட்டை நீடிக்கச் செய்ய, முழு கோபுரத்திலும் உள்ள விரிசலைச் சரி செய்தல் போன்ற மராமத்துப் பணிகளுக்கு ரூ.400 கோடி செலவாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கோபுரத்தின் உயரம் 315 அடி.
முழு பராமரிப்புப் பணி பூர்த்தியாவதற்கு 4 மாதங்களாகும். 1976இல் நடைபெற்றப் பழுது பார்க்கும் பணியின்போது 26 நாள்களுக்கு கடிகாரம் நிறுத்தப்பட்டது.