அரசின் நிர்வாகச் சீர்கேட்டாலும், பொறுப்பற்ற நிலையாலும் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. அரசு எந்திரம் செயலற்ற நிலையில், இளைஞர்களும் தொண்டர்களும் உயிரைப் பொருட்படுத்தாது வெள்ளத்தில் இறங்கி மீட்புப் பணி, நிவாரணப் பணியென்று இரவு பகல் பாராது தொண்டாற்றி சென்னை மக்களைக் காத்தனர்.
மதவாத சக்திகளும், சாதி வெறியர்களும் உணர்வேற்றி உசுப்பேற்றி ஊட்டிய மதவெறியும் சாதி வெறியும் சகதியுள் புதைந்து மடிய, மனிதம் மட்டுமே மேலோங்கி நின்று மக்களைக் காத்தது!
பல இடங்களிலிருந்தும் இளைஞர்கள் வெள்ளப் பகுதிக்கு வந்து மக்களைக் காத்தது போலவே, நிவாரணப் பொருட்களும் பலப் பகுதியிலிருந்தும் வந்து குவிந்தனர்.
பெருவெள்ளத்திற்கு சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டபோதே திராவிடர் கழகம் நிவாரணப் பணிகளையும், மருத்துவ பணிகளையும் செய்து தொண்டுக்கு வழிகாட்டியது.
அதேபோல், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலை, சென்னை, கடலூர், நாகை, புதுச்சோ, பகுதிகளில் திராவிடர் கழகம் சார்பில் பத்து நாள்களுக்கு மேலாக நிவாரணப் பணிகளும், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. பெரியார் திடலே நிவாரண முகாமாக அமைந்து, நிவாரணம் செய்வோருக்கும், பெறுவோருக்கும் நம்பிக்கைக்குரிய இடமாக அமைந்தது!
திராவிடர் கழகத்தின் நிவாரணப் பணிகளின் சில பதிவுகள் படங்களாக, தொண்டர்களுக்கு பாடங்களாக!
– தொகுப்பு : சிகரம்