¨ இன்றைய இந்துமதம் ஏறத்தாழ முற்றிலும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. வேதங்களைக் கொஞ்சங்கூட அடிப்படையாகக் கொண்டதல்ல.
¨ மகாபாரதப் போருக்குப் பின்னர் வேதமுறை வழிபாடு மறையத் தொடங்கியது. இன்று ஏறத்தாழ முற்றிலும் ஒழிந்துவிட்டது.
¨ ஆகமத்தின் வேர்ச் சொற்கள் “தொன்றுதொட்டு வந்தது’’ என்பதாகும். ஆகமம் என்பதற்கு ஆப்தவசனம் _ அதாவது மெய்யுணர்ந்தோர் கூற்று _ என்றும் பொருள் உள்ளது.
¨ வேதச் சடங்குகளும், ஆகமச் சடங்குகளும் ஒன்றுக்கொன்று போட்டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்துவிட்ட நிலையில், அவை வேறுபட்டவை என்பது இன்று மறந்துவிட்டது.
¨ வேதச் (வைதீக) சடங்குகள் அக்னிச் சடங்குகள், ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண்டாக்கி அக்னி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில்போடும் பொருள்கள் தெய்வங்களுக்குச் செல்கின்றன. ஆகம வழிபாட்டில், அக்னிக்கு வேலை இல்லை.
¨ சாதாரண உலகியல் வாழ்க்கையிலிருந்து, ஆசானையும் _ அரசனையும் போற்றும், வழிபடும் முறையைப் பின்பற்றிக் கடவுள் வழிபாட்டு முறைகளும், ஆகமங்களில் உருவாயின.
¨ ஆரியருக்கு முந்தி இந்தியாவில் வழங்கிய வழிபாட்டு முறைகளிலிருந்து தழைத்த அம்முறை (ஆகம வழிபாட்டு முறை) கி.பி.5_6ஆம் நூற்றாண்டுகளில் தென்னாட்டு மக்கள் மனதையும் கைப்பற்றியது.
(ஆதாரம்: தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) [History of Tamils])