எர்னஸ்ட் எம்மிங்வே
பெயர் : எர்னஸ்ட் எம்மிங்வே (Earnest Hemingway)
பிறப்பு : ஜூலை 21, 1899. இல்லினய்ஸ்
இறப்பு : ஜூலை 2, 1961. இடாஹோ
நாடு : அமெரிக்கா
துறை : எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதி
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான இவர் சிறந்த இலக்கியவாதியாக அறியப்பட்டவர்.
1920 லிருந்து 1950 வரை இவர் எழுதியவை பெருமளவில் வாசகர்களால் கவரப்பட்டது. தலைசிறந்த அமெரிக்க இலக்கியங்களில் இவரது படைப்புகளும் அடங்கும்.
7 நாவல்கள்,6 சிறுகதைத் தொகுப்புகள்,
2 கட்டுரைத் தொகுப்புகளை வாழும் காலத்தில் எழுதி வெளியிட்டார்.
3 நாவல்கள்,4 சிறுகதைத் தொகுப்புகள்,
3 கட்டுரைத் தொகுப்புகள் இவரது மறைவுக்குப் பின் வெளி வந்தது. ஒரு எழுத்தாளராக இருந்தபோதிலும் முதலாம் உலகப் போரின்போது 1918இல் இத்தாலி நாட்டில் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஓட்டுனராக மனிதாபிமான அடிப்படையில் பணியாற்றினார். இவருடைய இண்டியன் கேம்ப் (Indian Camp), தெ மூவெபில் பீஸ்ட் (The movable feast) ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை.
இவரது கடலும் கிழவனும் நாவலுக்கு தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
பெற்ற பரிசுகள் :
1954 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
1953 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது.
நாத்திகக் குத்து :
பகுத்தறிவோடு சிந்திக்கக்கூடிய எந்த மனிதனுமே நாத்திகன்தான்.
– புருனோ