அய்ந்தாண்டு சட்டக் கல்வி எங்கு படிக்கலாம்?

நவம்பர்16-30

(நவம்பர் 1-15 இதழின் தொடர்ச்சி)

11. அய்எல்எஸ் லா காலேஜ், புனே

புனேவில் உள்ள சாவித்ரி பாய் புலே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அய்எல்எஸ் சட்டக் கல்லூரியானது 1924_இல் தொடங்கப்பட்டது. எல்எல்பி மூன்று ஆண்டு சட்டப் படிப்பில் பட்டப் படிப்பு படித்தவர்கள் சேரலாம். பிஏஎல்எல்பி ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். இங்கு முதுநிலை சட்டப் படிப்பும் டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
விவரங்களுக்கு: https://ilslaw.wordpress.com/

12. ராஜீவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் லா, பாட்டியலா

பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவில் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் லா கல்வி நிலையத்தில் பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்), ஒருங்கிணைந்த அய்ந்து ஆண்டு சட்டப் படிப்பைப் படிக்கலாம். கிளாட் நுழைவுத் தேர்வு மூலம் இப்படிப்புக்கு பிளஸ் டூ படித்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இங்கு முதுநிலை சட்டப் படிப்பும் ஆய்வு படிப்பும் உள்ளன.
விவரங்களுக்கு: www.rgnul.ac.in

13. டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோ

லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி 2006_ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பிஏஎல்எல்பி (ஆனாஸ்), அய்ந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். அதற்கு கிளாட் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இங்கு முதுநிலை சட்டப் படிப்பும் ஆய்வுப் படிப்பும் உள்ளன.

விவரங்களுக்கு: www.rmlnlu.ac.in

14. அரசு சட்டக் கல்லூரி, மும்பை பல்கலைக்கழகம், மும்பை

மும்பை பல்கலைக்கழகம் தொடங்கப்-படுவதற்கு முன்பே, 1855_இல் உருவான கல்லூரி, மும்பை அரசு சட்டக் கல்லூரி. இங்கு மூன்று ஆண்டு சட்டப் படிப்பில் பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சேரலாம். அய்ந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். அவர்கள் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

விவரங்களுக்கு: http://glcmumbai.com/

15. பேகல்ட்டி ஆஃப் லா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார்
அலிகாரில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள சட்டத் துறையில் பிஏஎல்எல்பி சட்டப் படிப்பையும், எல்எல்எம் முதுநிலை சட்டப் படிப்பையும் படிக்கலாம்.

விவரங்களுக்கு: http://www.amu.ac.in/

16. நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ், கொச்சி
கொச்சியில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) அய்ந்து ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். கிளாட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அட்மிஷன் இருக்கும். இங்கு முதுநிலை சட்டப் படிப்புகளையும் படிக்கலாம்.
விவரங்களுக்கு: www.nuals.ac.in

17. ஆர்மி இன்ஸ்டிட்யூட் ஆஃப் லா, மொஹாலி

இந்திய ராணுவ நலச் சங்கத்தின் முயற்சியால் 1999-_இல் தொடங்கப்பட்ட ஆர்மி  இன்ஸ்டிட்யூட் ஆஃப் லா தற்போது மொஹாலியில் செயல்பட்டு வருகிறது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் இந்தக் கல்வி நிறுவனத்தில் பிஏஎல்எல்பி என்ற அய்ந்து ஆண்டு சட்டப் படிப்பையும் எல்எல்எம் என்ற ஓராண்டு முதுநிலை சட்டப் படிப்பையும் படிக்கலாம்.
விவரங்களுக்கு: http://ail.ac.in/

18. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை

தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன. 1997_ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில், ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் லா என்ற சிறப்புச் சட்டக் கல்வி நிலையத்தில் பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) அய்ந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பில் பிளஸ் டூ வகுப்பில் 70 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றவர்கள் சேரலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
விவரங்களுக்கு: www.tndalu.ac.in

19. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

நாட்டில் பழமை வாய்ந்த சட்டக் கல்லூரிகளில் ஒன்று, தற்போதுள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி. 1891_ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் அய்ந்து ஆண்டு பிஏபிஎல் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். நுழைவுத் தேர்வு கிடையாது. பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இங்கு மூன்று ஆண்டு பிஎல் சட்டப் படிப்பில் பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சேரலாம். இங்கு இரண்டு ஆண்டு எம்எல் படிப்பும் உள்ளது.

விவரங்களுக்கு: www.draglc.ac.in

20. தேசிய சட்டப் பள்ளி, திருச்சி

திருச்சியை அடுத்த நாவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு நேஷனல் லா ஸ்கூல். 2013_ஆம் ஆண்டு முதல் மாணவர்களைச் சேர்த்து வருகிறது. இங்கு பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்), பிகாம் எல்எல்பி (ஆனர்ஸ்) ஆகிய அய்ந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் உள்ளன. கிளாட் நுழைவுத் தேர்வு மூலம் இப்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்-படுகிறார்கள். தமிழக மாணவர்களுக்கு தனி ஒதுக்கீட்டு இடங்கள் உண்டு.

விவரங்களுக்கு: http://www.tnnls.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *