இவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். பார்ப்பன ஆதிக்கத்தை அகற்றி, பார்ப்பனரல்லாதார் உயர அல்லும் பகலும் அரும்பாடுபட்டவர். இந்தவகையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் முதல் குரல் கொடுத்தவர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காய் முதன் முதல் அமைப்புகளைத் தொடங்கியவர்.
1868இல் சத்திய ஜோதக் சமாஜ் என்ற அமைப்பினை ஏற்படுத்தி பார்ப்பனர் அல்லாதாருக்காகப் பாடுபட்டார்.
இவரது ஈடு இணையற்ற சேவைக்காக, இவர் மகாத்மா என்று அழைக்கப்பட்டார்.
இவர் மறைவிற்குப்பின் மேற்கண்ட அமைப்பை ஷாகுமகராஜ் தொடர்ந்து நடத்தினார்.