மைல்கல்லையே முனியசாமி கோயில்
ஆக்கிய விருதுப்பட்டி மக்கள்!
விருது நகரில் செந்திவினாயகர் தெருவில் விருதுப்பட்டி 1 மைல் என்று தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதப்பட்ட மைல் கல்லை முனியசாமி கோயிலாக்கியுள்ளனர். அக்கோயிலின் கடவுளே மைல்கல்தான்.
அப்பகுதி மக்கள் அதைப்பய பக்தியுடன் வணங்குகின்றனர். அக்கோயிலுக்கு உண்டியலும் வைக்கப்படுள்ளது.
இன்றைய விருது நகர்தான் அன்றைய விருதுப்பட்டி. ஆக, கடவுள்கள் இப்படித்தான் வந்தன.
படைவீரனுக்கும், பத்தினிப்பெண்களுக்கும் நினைவுக்கல் நட்டு வணங்கினர். அவையே பின்னாளில் வீரன் கோயிலாகவும், அம்மன் கோயிலாகவும் மாறின!