குரல்

ஜூன் 16-30
  • ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் மீது நேட்டோ விமானங்கள் குண்டுவீச இனி அனுமதிக்கப்படமாட்டாது.  குண்டு வீச்சு தொடர்ந்தால், அவர்கள் ஆப்கன் மக்களுக்கு எதிராக, ஆப்கனை ஆக்கிரமித்துள்ள அந்நியப் படைகளாகக் கருதப்படுவர். – ஹமீத் கர்சாய், அதிபர், ஆப்கானிஸ்தான்
  • தமிழ் மக்களின் விடயம் அனைத்துலகின் பார்வைக்கு வர நீண்டகாலம் ஆகியிருக்கிறது.  தற்போது முன்னிலைக்கு வந்துள்ள தமிழ் மக்களின் விடயத்தை வைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும். – போல் மேர்பி, நாடாளுமன்ற உறுப்பினர், அய்ரோப்பா

  • காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளைப் போன்றதுதான், லிபியாவில் அரசுக்கு எதிரானவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையும்.  எனவே, இந்தியா என்னை ஆதரிக்க வேண்டும். – கடாபி, அதிபர், லிபியா
  • புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அமெரிக்காவிலேயே நிகழ வேண்டும்.  இந்த விஷயத்தில் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்துவதை நான் விரும்பவில்லை.  அங்கிருந்து புதிய தொழில்நுட்பங்கள் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது.  உலகம் முழுவதும் நமக்குப் போட்டிகள் அதிகரித்துள்ளன.  ஜெர்மனி, சீனா, தென்கொரியா போன்றவை கடும் போட்டியைக் கொடுக்கின்றன.  எனவே, அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். – ஒபாமா,அதிபர், அமெரிக்கா
  • பெண்களின் அறிவை, சுய சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுகிறோம்.  பெண்களை தேவி, தெய்வம் என்று சொல்லி ஆமாம் சாமி போடவைத்துவிடுகிறோம்.  தனித்தன்மையோடு, தனி அடையாளத்தோடு பெண்களை வளர்க்க வேண்டும். தன் சுய விருப்பு வெறுப்புகளுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பவன் தீவிரவாதி.  அப்படி என்றால், கண்ணகிதான் முதல் தீவிரவாதி.  அவள் தன் சுய கோபத்துக்காக மதுரையை எரித்தாள்.  அவளுக்குச் சிலை வைத்து இருக்கிறோம். –  பாலுமகேந்திரா, திரைப்பட இயக்குநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *