செம்பருத்தி… இது செம்பரத்தை, செவ்வரத்தை என்ற வேறு பெயர்களைக்-கொண்டது. செம்பருத்தியின் பூவுக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. குறிப்பாக, இதயநோய்க்கு செம்பருத்திப்பூ அருமையான மருந்தாகும். காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூவின் இதழ்களைச் சாப்பிட்டு வந்தால், காலப்போக்கில் இதயநோய் குணமாகும். மேலும், இதயநோயாளிகளுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளையும் இந்த செம்பருத்திப்பூ சரிசெய்யக்கூடியது.
மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பிரச்னைகள் தீருவதோடு கர்ப்பப்பை குறைபாடுகள் சரியாகும். செம்பருத்திப்-பூக்களை தலைக்குத் தேய்க்கும் சிகைக்காய் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும். காயவைத்த செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, பயத்தம்-பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக்கி, சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசி குளித்து வர, தோல் நோய்களில் இருந்து விடுபடலாம்.