பிராமணர், பிராமணர் மகாசபை வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும் உரிமையும் கிடைக்கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் சாதியானுக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பானின் தாசி மக்கள் என்ற பட்டம் தான் கிடைக்கும்.
அதனால் தான், நம்மைச் சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக்கொள்கிறோம். சூத்திரர் என்பவர்-களுக்குத் திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் வேறு யாராவது கூறுவார்களானால், அதை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டு, எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.
நீங்கள் கொடுக்கும் பெயரில், நான் மேலே கூறிய அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு தூசிகூட புகுந்துகொள்ள வசதி இருக்கக் கூடாது. அயலார் புகுந்துகொள்ளாமல் தடுக்க ஏதாவது தடை இருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால், திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து-கொள்ள முடியாது. நாம் ஒழிக்கப்பாடுபடும், பிறவி காரணமாக இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் இல்லை.