மக்கள் மனசு இந்த இதழுக்கான கேள்வி :

செப்டம்பர் 01-15

மக்கள் மனசு

இந்த இதழுக்கான கேள்வி :

இணையத்தில் ஆபாசம்! இளைஞர்கள் பலியாகாமலிருக்க என்ன செய்யலாம்?

உண்மை வாசகர்கள் அளித்த பதில்கள்!

இளைய மகாத்மா இளைய மகாத்மா:  ஆபாசம் என்பது அவரவர் நிலைப்பாடே; திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

முதுவை. பா. நாகராசன்: இளைஞர்கள் இது போன்ற தவறு செய்வதற்கு இன்றைய சினிமா தான் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. இதைச் சரிசெய்ய அதே சினிமா மூலமே முயற்சி செய்யலாம். இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு உண்டாக்கலாம்.

மகா சிமி: இணையத்தில் அப்படங்களைப் பதிவு செய்வோரைக் கொண்டே அவர்களின் பிள்ளைகளுக்கு முதலில் போட்டுக்காட்டி அவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டுத் திருத்திய பின்னர் பிரசுரிக்க வைக்கலாம். அடுத்தவருக்குத் தன் செயலை நியாயப்படுத்தும் ஒருவர் தன் பிள்ளைகளிடம் இதற்குத் தலை நிமிர்ந்து பதில் செல்லட்டும்.

கணபதி சுப்ரமணியம்: தொலைக்காட்சிகளில் வராததையா இந்த இணையம் காட்டிடப் போகுது.. மஞ்சள் பத்திரிகைகள் அளவுக்குத் தானே வார இதழ்களில் வருகிற உள்ளாடை விளம்பரங்கள் இருக்கு.

அதுகுறித்தச் சரியான விழிப்புணர்வு கிடைக்கும்பொழுதுதான் மாற்றம் ஏற்படும்.

முகமது இசாக்:  இதைச் செய்யணும். இதைத் தடை செய்வதே மேல்.

விக்கி என்பிலேம்: இதைத் தடுக்க இயலாது. அரபு நாடுகளிலே தோல்வி.

ராஜா அனன்யா: ஆண்கள் பெண்களைத் தன் தாயாகவும், பெண்கள் ஆண்களைத் தன் தந்தையாகவும்  நினைத்தாலே பாதி அளவு தடுக்கலாம். நாம் நம்முடைய வேலையை சரியாகப் பார்த்தால் எத்தனை ஆபாசப் பக்கம் இருந்தாலும் அதனால் நமக்கு பாதிப்பு ஏற்படாது. ஆபாசப் பக்கத்திற்குத் செல்வதை நாமே குறைத்துக் கொண்டால் அவர்கள் எப்படிப் பிழைப்பு நடத்துவார்கள்? சொந்த புத்தி இருந்தாலே போதும்.

டுஜோன் தமிழன் பகுத்தறிவாளன்: அறியாத நிலையில் அறிய முயற்சி செய்வதை, ஓரளவுக்கு பிரௌசர்லேயே தடை செய்து விடலாம். ஆனால், தெரிந்தே முயற்சி செய்து பார்ப்பதால், அதைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

சுரேஷ் ஆண்டே:  எல்லா வெப்சைட்டையும் தடை செய்யவேண்டும்!

அப்துல் ரஹிம் பைரோஜ்: இணையதளம் நடத்துவோரும், பெற்றோரும் adult site blockers  பயன்படுத்தித் தடை செய்யலாம்.

அரி புகழ்: இதுபோன்ற வெப்சைட்டுகளை கட்டாயம் மூடவேண்டும்.

க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி: இரயில் வந்தபோது கோழி முட்டையிடாது என்றனர். சினிமா வந்தபோது சமுதாயம் கெட்டுவிடும் என்றனர். கத்தி நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன்படும். இணையத்தில் ஆபாசம் அலர வேண்டாம்.

மூர்த்தி மேனன்: ஒழுக்கம் என்பதும் கட்டுப்பாடும் அவரது சொந்த நிலைப்பாடு.
சித்தார்த் சீதாராமன்: சுயஒழுக்கம், கட்டுபாடு ஒன்றே நிரந்தர வழி கட்டுப்படுத்தத் செய்யும். மற்ற எல்லா வகையான தடையும் தற்காலிகமானது.
கால்ஸ்பெர்க் பெர்க்: ஒன்றும் செய்ய முடியாது.

பாலு சாமி:  தன்னடக்கம் வேண்டும். நன்னெறி போதிக்க வேண்டும். தடை செய்யவும் வேண்டும்.


அடுத்த இதழுக்கான கேள்வி : வாக்கு வங்கிக்காக ஜாதி வெறியைத் தூண்டும் அரசியல் கட்சிகளுக்குப்  பாடம் புகட்ட என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கருத்துகளை உண்மை இதழின் முகநூல் பக்கத்திலோ (www.facebook.com/UnmaiMagazine),

மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலமோ பதிவு செய்யுங்கள். சிறந்த கருத்துகள் பதிப்பிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *