Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அமெரிக்கா வழங்கும் நுழைவு இசைவு: இந்தியர்களுக்கே முதலிடம்

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் பிரிவு அளித்த புள்ளிவிவரத்தின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில், கணினி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளுக்காக 76,000 எச்-1 பி நுழைவு இசைவுகளை அமெரிக்கா வழங்கியது. அவற்றில், 86 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதில் சீனர்கள், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். எனினும், மொத்த இடங்களில் சீனாவைச் சேர்ந்த 5 சதவீதம் பேருக்கு மட்டுமே எச்-1 பி நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில், வேறு எந்த நாடும் ஒரு சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. இயந்திரவியல், மின்சாரவியல், கட்டுமானவியல் உள்ளிட்ட பிற பொறியியல் பிரிவுகளைப் பொருத்தவரை 47 சதவீத இந்தியர்களுக்கு எச்-1 பி நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், சீனா 19.5 சதவீதத்துடன் 2-ஆவது இடத்தையும், கனடா 3.4 சதவீதத்துடன் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன என்று அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கே முன்னுரிமை:

அமெரிக்க வர்த்தகச் செயலர் ஸ்டீஃபன் செலிக், இது தொடர்பாக செய்தியாளர்களிடம், அமெரிக்க அரசு வழங்கும் குறுகிய கால நுழைவு இசைவில் 65 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. உலகின் வேறு எந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவுக்கே அதிக எண்ணிகையிலான நுழைவு இசைவுகளை நாங்கள் வழங்கி வருகிறோம் என்றார்.