இவ்விடம் அரசியல் பேசலாம்! – 17

செப்டம்பர் 01-15

அப்துல் கலாம் மலர் வளையத்திலும் “அம்மா”!


என்ன தோழரே, நேத்திக்கு உங்க கடை விடுமுறை விட்டுடிங்க போல? கடை பூட்டியிருந்ததே?

என்ன பண்றது தோழர், கடைக்கு இடதுபக்கம் ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை இருக்கு, கடைக்கு வலது பக்கமும் ஒரு டாஸ்மாக் கடை இருக்கு… மதுபானக்கடைக்கு எதிரா போராட்டம் பண்றவங்க எறியிற கல்லு குறி தப்புனா என்னோட கடை தப்பாது! அட கடை தப்புறது இருக்கட்டும், என்னை நம்பி தலையை குடுக்குறவங்களோட மண்டை தப்புமா? அதான் லீவு விட்டுட்டேன்!
அதுஞ்சரி தான்! முன்ன இருன்டக் கவர்மெண்ட்டெல்லாம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்கற கொள்கையில் குறியா இருந்தாங்க.. ஆனால் தற்போதைய அரசோ, வீட்டுக்கு ஒரு டாஸ்மாக் திறக்குறதுல தீவிரமா இருக்காங்க…

ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்த மதுக்கடைகளை ஊருக்குள்ள கொண்டாந்தாங்க… இப்போ தெருவுக்கு ஏழெட்டு மதுக்கடைகளை தீவிரமா உருவாக்குறாங்க தோழர்… அநியாயமா இருக்கு!

இதுக்காக இபப்டி மதுகக்டைகள் மேல கல்லெறிஞ்சு போராடுறதுக்குப் பதிலா, ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் அம்மா மதுபானக்கடை அப்படிங்கற போர்டை மட்டும் மாட்டி வச்சுட்டு வந்துட்டால் போதும்! சரியான பதிலடியா இருக்கும் தோழர்!
அதான… கவர்மெண்ட் காசுல எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அத்தனையிலும் என்னவோ இவங்க சொந்த காசுல கொண்டு வந்த மாதிரி அம்மா அம்மான்னு சேர்த்துக்கறாங்க… ஆனால் மதுபானக்கடை படத்தில் சொன்னமாதிரி, கவர்மெண்ட் ஸ்டெடியா நடக்குறதுக்கு முக்கிய காரணமா இருக்குற டாஸ்மாக் கடைக்கு மட்டும் அம்மா பெயரை வைக்காமல் கவுரவம் பார்க்குறாங்க!

இதுல ஒரு கொடுமை என்னன்னா அப்துல் கலாமுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்துற மலர்வலையத்தில் கூட அம்மான்னு கொட்டை எழுத்துல எழுதியிருக்கு! என்ன ஒரு பய மரியாதை! நல்லவேளை, இறுதி அஞ்சலிக்கு அந்தம்மா வந்திருந்தால் கலாமை கண்டுக்காமல் விட்டுட்டு அம்மாவுக்கு சலாம் போட்டுக்கிட்டு திரிஞ்சிருப்பாங்க!

ம்ம்ம்… எதெதுக்கோ காணொலிக் காட்சியில திறப்பு விழா வைக்கிறாங்க.. இனி இன்டக் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கும் அப்படி வச்சிட்டால் சவுகரியமாப்போகும்… தமிழ்நாட்டு நிலவரம் தான் இப்படி இருக்குன்னா மத்தியில் இருக்குற நிலவரம் இன்னும் மோசம் தோழர்…

எதைச் சொல்றிங்க?

இங்க அம்மா புகழ் பாடுற கூட்டத்தோட தொல்லைன்னா, மத்தியில் சாமியார்களோட புகழைப் பாடுற கூட்டத்தால தொல்லை!

ஓ… ஆசாராம்பாபு மாதிரியான ஆட்களோட வாழ்க்கையை பாடத்திட்டத்துல வைக்கறதச் சொல்றீங்களா?

ஆமாம் தோழர்… ஒரு பக்கம் என்னடன்னா ஆபாச வெப்சைட்டுகளுக்குத்தடைன்னு சொல்றாங்க.. இன்னொரு பக்கம், ஆசாராம்பாபு, ராம்தேவ் மாதிரியன கேடிச்சாமியார்களுக்கு காவடி தூக்குறாங்க! அவங்க டிசைனே அப்படித்தான் போல தோழர்!

ஆபாச வெப்சைட்டுகளுக்குத் தடைங்கறது என்னவோ நம்ம மாதிரி பொதுமக்களுக்கான அறிவிப்பு மாதிரி தெரியல தோழர்… இந்த பிஜேபி எம் எல் ஏக்கள் சட்டமன்றத்துல வச்சே ஆபாச வெப்சைட்டுகள் பார்த்து கையும் செல்லுமா பிடிபட்ட வரலாறு எல்லாருக்கும் தெரிஞ்சது தான! அவங்களையெல்லாம் சொல்லித் திருத்த முடியாதுன்னு பொத்தாம்பொதுவா சட்டமா கொண்டு வந்திருப்பாங்கன்னு தான் தோணுது!

முதலில் இவங்களுக்கு கலாச்சாரம் எது ஆச்சாரம் எதுன்னு தெரியுமான்னே தெரியலைங்க தோழர்… அந்தந்த வயசுல பார்க்கறதை பார்க்கத்தான் செய்வான்… அதெல்லாம் இயல்பான விஷயம் தான். அன்டக் காலத்துல திருட்டுத்தனமா தியேட்டர்ல போயி பார்த்தவனுங்களுக்கு இப்ப செல்போன்ல உள்ளங்கைக்குள்ளயே பார்க்கற மாதிரி காலம் மாறியிருக்கு. பார்க்கற வயசுல இருக்குறவன் பார்க்கப்போறான்… அதையும் தடுப்பேன்னு சொன்னால் அதை மனப்பிறழ்வுன்னோ, பழமை தீவிரவாதம்னோ தான் சொல்லணும் தோழர்!

அப்போது இடையே புகுந்த தோழர் முத்து, இவங்க இப்படி தடை அறிவிச்சதுமே விளம்பரப் புகழ் பூனம் பாண்டே, நான் இருக்கேன் யாரும் கவலைப்படாதீக்ன்க!ன்னு ஆறுதல் சொல்றாங்க பார்த்திங்களா தோழர்! என்றார்…
அந்தம்மா எந்த ஒரு பரபரப்பான சூழலிலும் சைக்கிள் கேப்பிள் ஆட்டோ ஓட்டுற திறமைசாலி… மோடியை ஒரு விளம்பரக் கம்பெனி தத்தெடுத்து வளர்க்குதுன்னா, இந்த பூனம் பாண்டேவையும் ஒரு விளம்பரக் கம்பெனி தான் வழிநடத்துது!

விளம்பரம்னதும் தான் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது தோழர்… நம்ம அப்துல்கலாம் மறைந்தாலும் மறைந்தார், அவரையும் அவரோட உருவப் புகைபப்டத்தையும் வைத்துக்கொண்டு விளம்பரம் தேடுபவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமா ஆயிடுச்சு

நானும் இதை யோசிச்சேன் தோழர்… ஊருக்குள்ள திருட்டுத்தனம் பண்றவன், பிக்பாக்கெட் அடிக்கிறவன்னு அயோக்கியத்தனம் பண்ற அம்புட்டு பேரும் கலாம் போட்டோவைப் போட்டு, அஞ்சலி செலுத்துற மாதிரி பண்ணின அலப்பறை இருக்குதே! அந்த கலாமே அதைப் பார்த்தால் ஆச்சர்யப்பட்டிருப்பார்!

மாணவர்களுக்காகவே தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்ட அவரோட தியாகத்தை, அடாவடியா பீஸ் புடுங்குற பல கல்வி நிறுவனங்கள், தங்களோட வியாபாரத்துக்கு விளம்பரமா பயன்படுத்திக்கிட்ட கொடுமையையும் பார்க்க முடிஞ்சது!

இதிலயும் நம்ம முதல்வர் பண்ணின அரசியல் இருக்குதே, எல்லாரும் அவரோட பிறந்தநாளை மாணவர்கள் தினமா கொண்டாட வழிபண்ணணும்னு கேட்டால், இந்தம்மா டக்குன்னு இளைஞர் எழுச்சி நாள்னு அறிவிக்கிறாங்க…

இளைஞர்கள்னு சொல்லிட்டால், பள்ளியிலோ, கல்லூரியிலோ இதனை கொண்டாட வேண்டிய அவசியம் வராதுங்கற ஐடியா தான் அது!

இந்த யாகூப் மேமனை அவசர அவசரமா அவரோட பிறந்தநாளிலேயே தூக்குல போட்டதப் பார்த்திங்களா?

ஆமாம்… ராத்திரியோட ராத்திரியா கோர்ட்ட நடத்தி, பைலை கிளியர் பண்ணி தூக்குல போட்டதுல தான் எத்தனை அவசரம்… இதே கோர்ட்டு, குஜராத் கலவரத்துல ஈடுபட்டவங்க மேலயோ, ஆசராம்பாபு மாதிரியான கற்பழிப்புச் சாமியார்கள் மேலயோ இம்புட்டு தீவிரமா இயங்குனதில்ல… அவங்களையெல்லாம் உத்தமர்கள்னு நம்பி விடுதலை பண்ணினவங்க தான….

சட்டம் ஒரு இருட்டறைன்னு அன்னைக்கு அண்ணா சொன்னது இன்னைக்கு வரைக்கும் உண்மையாத்தான் இருக்குது தோழர்… அந்த இருட்டறைக்குள்ள என்னதான் நடக்குதுன்னு சில சமயம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *