Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கிரீன் டீ எல்லோரும் சாப்பிடலாமா?

இது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கக்கூடியது. குறைந்த கலோரிகளைக் கொண்டது. உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கரைக்கும், குறைக்கும். கொழுப்பு தேவைக்கதிகமாய் சேர்வதைத் தடுப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கும். புற்றுநோய்ச் செல்களை அழிக்கும். தோலில் புதிய செல்கள் உருவாக உதவும். அதன்வழி வயதான தோற்றத்தைத் தடுக்கும். தலைமூடி நன்றாக வளர உதவும்.

 

இது வயிற்றில் அமிலத்தன்மையை (அசிடிட்டி) உண்டுபண்ணும் என்பதால், இதை அடிக்கடி சாப்பிடக் கூடாது, வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. எனவே, காலை 11 மணி, மாலை 5 மணி இதைப் பருக உகந்த நேரம்.

இதில் பால், சர்க்கரைக் கலந்து சாப்பிடக்கூடாது. இவை இதன் பயனைக் கெடுக்கும். இதை கொதிக்க வைக்கக் கூடாது. கொதிக்க வைத்தால் அதிலுள்ள சத்துக்கள் அழியும். எனவே, கொதிக்க வைத்த நீரில் தேயிலைத் தூளை அல்லது தேயிலைப் பையை மூழ்கடித்துச் சாறு இறங்கியதும் பருக வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் இதைப் பருகுதல் நலம் தரும். சர்க்கரை நோயாளிகள் தாகத்தைக் குறைக்கும்; உடல் எடையைக் குறைக்கும்.

இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம். நோய் இல்லாதவர்களும் சாப்பிடலாம்.