வந்ததனால் வரவில்லை வராவிட்டால் வந்திருப்பேன்!
செத்ததனால் சாகவில்லை சாகாட்டி செத்திருப்பேன்!
இது என்ன உளறல் என்கிறீர்களா?
இல்லை இது அக்கால தமிழ்க் காதலியின் நுட்பமான வார்த்தை விளையாட்டு!
அக்கால தமிழரிடம் ஜாதியில்லை, கர்வக் கொலையில்லை, வயதுவந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து காதல் வளர்த்து பின் இல்வாழ்வு ஏற்பர்.
அப்படி காதல் கொண்டு பழகிய காதலியைப் பார்த்து காதலன் முழுநிலவில் வருவதாய்ச் சொன்னாயே ஏன் வரவில்லை என்கிறான், அதற்கு அவள், வந்ததனால் வரவில்லை வராவிட்டால் வந்திருப்பேன்! என்கிறாள். உங்களைப் போலவே அவனும் புரியாமல் அவளையே பார்க்கிறான்.
அவள் கண்ணை மூடிக் கொண்டு மாதவிலக்கு என்கிறாள்.
இப்போது புரிகிறதா?
மாதவிலக்கு வந்ததனால் அவள் இவனைச் சந்திக்க வரவில்லை, அது வராமலிருந்தால் வந்திருப்பாள்! என்பதே அதற்குப் பொருள்.
ஓ! செத்ததனால்…. என்று அதற்கு விளக்கம் கேட்டான். இன்று உங்களைப் பார்க்க வந்தபோது வழியில் ஒரு பாம்பு. அது செத்த பாம்பு. அது செத்ததால் நான் சாகவில்லை. இல்லையென்றால் நான் அது கடித்துச் செத்திருப்பேன்! என்றாள்.
என்னங்க… தமிழர் அறிவுக்கு இணை இவ்வுலகில் எங்காவது உண்டா?