பொதுமக்கள் பெரும்பான்மையோருக்கு, காஸ் சிலிண்டர் வெடித்தால் ஏற்படும் துர்பாக்கிய சம்பவங்களான மரணம், காயம் போன்றவைகளுக்காக காப்பீடு கிடைக்கும் என்ற உண்மையே தெரியாது.
சில பத்திரிக்கைகளில் இது தொடர்பான கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தற்காலங்களில், சமூக வலைத்தளங்களில் (Facebook, Whatsapp) இந்த காப்பீடு குறித்த அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
காஸ் சிலிண்டர் வெடித்து, அதனால் மரணம் சம்பவித்தால், நுகர்வோர் ரூ.40 லட்சம் வரையிலும் காப்பீட்டுத் தொகை பெறலாம் என்று அறிக்கை கூறுகிறது. இது முழுவதும் உண்மையல்ல. இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகை உண்டு. ஆனால், 40 லட்சம் என்பது சரியல்ல.
மேலும், எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் தனிப்பட்ட LPG நுகர்வோருக்காக, காப்பீட்டு பாலிசி எதுவும் எடுப்பதில்லை. LPG நிறுவனங்களும், விநியோகஸ்தர்களும் Third Party Liability Insuranceயை எடுக்கின்றன. நுகர்வோரிடமிருந்து Premium எதுவும் பெறுவதில்லை. LPG விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிறுவனத்திடமிருந்தும், அவர்களுடைய பகுதி கேஸ் ஏஜென்ஸியிடமிருந்தும் காப்பீடு பெற முடியும்.
Third Party Liability Policy, தனிப்பட்ட விபத்துப் பாதுகாப்பு, மருத்துவச் செலவு, வீட்டு சேதம் இவற்றிற்கான காப்பீடு ஏற்பாட்டைச் செய்கிறது. நுகர்வோருக்குக் கொடுக்கப்படும் தொகை விபத்து, பாதிக்கப்பட்டவர் _ இவர்களைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என்ற நிறுவனங்கள் United Insurance Company Ltd என்ற காப்பீட்டுக் கழகத்திலிருந்து பாலிசி எடுத்துள்ளன.
காப்பீடு தொடர்பான விரிவான விளக்கங்கள்
தனிப்பட்ட விபத்துப் பாதுகாப்பு ரூ. 5 லட்சம் (ஒரு விபத்திற்கு ஒரு நபருக்கு),
மருத்துவச் செலவு (அதிகபட்சம்) _ ரூ.15 லட்சம் (ஒரு விபத்திற்கு),
சொத்து சேத மதிப்பு ரூ 1 லட்சம் (ஒரு விபத்திற்கு)
இந்த காப்பீடு பாதுகாப்பைத் தவிர, LPG விநியோகஸ்தர்களும், நஷ்டத்தைச் சமாளிக்க, Third Party Liability Insuranceஎடுத்துள்ளார்கள்.
விபத்து நேர்ந்தால், காப்பீடு எவ்வாறு பெறுவது?
LPG நுகர்வோர் கடைபிடிக்க வேண்டிய செயல்முறை விபத்து நடந்தால், LPG நுகர்வோர், LPG விநியோகஸ்தருக்கு உடனடியாக எழுத்து பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். விநியோகஸ்தர், எண்ணெய் நிறுவனத்திற்கும், காப்பீட்டுக் கழகத்திற்கும் இந்த விபத்தைக் குறித்து தகவல் தெரிவிப்பார்.
நுகர்வோர், காப்பீட்டுக் கழகத்திற்கு நேரடியாகத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை.
நுகர்வோர், மரணம் சம்பவித்திருந்தால் பிரேதப் பரிசோதனை அறிக்கை, ஆய்வாளர் அறிக்கை (Corners Report), மருத்துவ அறிக்கை (Inquest Report) –_ இவற்றின் அசல் சான்றிதழ்களை எண்ணெய் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
காயம் ஏற்பட்டிருந்தால், அசல் மருத்துவ ரசீதுகள், மருந்துச் சீட்டுக்கள் (அசல்), கடைகளிலிருந்து பெறும் மருந்துச் சீட்டுக்கள், மருத்துவமனையிலிருந்து பெறப்படும் Discharge Card. (அசல்), இவற்றைத் தவிர மருத்துவச் செலவுகளுக்கான வேறு ஆவணங்களின் நகல்கள் _ இவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சொத்து சேதம் ஏற்பட்டிருந்தால் (நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கட்டிடத்தில் _ _ Customer’s Registered Premises) காப்பீட்டுக் கழகம் நஷ்டத்தை அளவிட ஒரு ஆய்வாளரை (Surveyor) நியமிக்கும்.
பகுதி விநியோகஸ்தர், காப்பீட்டு முயற்சிக்காக, நுகர்வோருக்கு தேவைப்பட்ட அனைத்து வசதிகளையும் செய்து, அது தொடர்பான வழிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
நுகர்வோரின் காப்பீட்டு முயற்சி நிராகரிக் கப்படாமலிருப்பதற்காக, ISI தரச் சான்றிதழ் பெற்ற சாதனங்களை (lighter & gas pipe) பயன்படுத்த வேண்டும். கேஸ் டீலர், அடிக்கடி சிலிண்டர் பராமரிப்புச் சோதனைகளைச் செய்ய வேண்டும். நுகர்வோர், விநியோகஸ்தரிடம் கூற வேண்டும். ஒவ்வொரு வருடமும், ஏராளமான விபத்துக்கள் நிகழ்கின்றன. எண்ணெய் நிறுவனங்களும், வாயு காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரிமியம் வழங்குகிறார்கள். ஆனால், போதுமான விழிப்புணர்ச்சி இல்லாமையால், பாதிக்கப்பட்டவர்கள். அதற்கான முயற்சிகள் செய்வதில்லை. சிலிண்டர், விநியோகஸ்தர்கள், அறிவிக்கைப் பலகைகளில் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி தகவல்களை ஒட்டி வைக்க வேண்டும். நுகர்வோருக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், முயற்சிகள் எடுப்பதில்லை.
Leave a Reply