இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 127 கோடியே 42 லட்சத்து 39 ஆயிரத்து 769 (ஜூலை 2014 கணிப்பு)
இந்தியா முழுவதும் உள்ள 640 மாவட்டங்களில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 24.39 கோடி குடும்பங்கள் வசிக்கின்றன.
இதில் 17.91 கோடி குடும்பத்தினர் (73 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 18.05 சதவீத தலித்துகளும், 11 சதவீத பழங்குடியின மக்களும் அடங்குவர்.
கிராமப்புறங்களில் வாழ்வோரில் கணிசமான குடும்பத்தினர் மிகவும் குறைந்த வருவாய் பெற்று வருவது கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி 7.05 கோடி (39.39 சதவீதம்) குடும்பத்தினர் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மாத வருமானம் பெறாதவர்கள் ஆவர்.
ஒட்டுமொத்த கிராமப்புற மக்கள் தொகையில் 56சதவீத குடும்பத்தினர் நிலமற்ற ஏழைகளாக வசித்து வருகின்றனர்.
தலித் இனத்தைப் பொறுத்தவரையில் 70 சதவீதத்தினரும், பழங்குடியினர் 50 சதவீதத்தினரும் நிலமற்றவர்களாக இருந்து வருகின்றனர்.
6.68 லட்சம் பேர் பிச்சைக்காரர்கள், 30.10 சதவீத கிராமப்புற குடும்பங்கள் (5.39 கோடி) வேளாண் தொழிலை நம்பியும், 9.14 கோடி குடும்பத்தினர் (51.14 சதவீதம்) தினக்கூலியாளர்களாகவும் இருக்கின்றனர்.
சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.
தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதன் மூலம் 2.5 கோடி குடும்பத்தினர் வருவாய் ஈட்டுகின்றனர்.
ஊரகப் பகுதியில் வசிக்கும் 4.6 கோடி குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர்.
3.49 சதவீத எஸ்.சி.க்களும், 3.34 சதவீத எஸ்.டி. பிரிவினரும் வருமான வரி செலுத்துகின்றனர்.