ஒரு பாடலின் ஈற்றடி அடுத்தப் பாடலின் தொடக்கமாக அமையும் அந்தாதி முறையில் எழுதப்பட்ட தமிழ்ப் பாடலில் தமிழரின் நீரியல் அறிவு தெற்றெனத் தெரிகிறது.
என்னென்ன மரங்கள் இருக்கும் இடத்தில், என்னென்ன புற்கள் இருக்கும் இடத்தில் நீர் கிடைக்கும் என்பதைத் தமிழ்ப் பாடலில் தமிழர்கள் பதிவு செய்துள்ளனர்.
பருமரக் கருஆல் அத்தி பாற்பொடி
மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாய் புளி
தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்
கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே
என்ற பாடல் என்னென்ன மரங்கள் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர் இருக்கும் என்பதைச் சொல்கிறது.
காணும் வெண்புல் கரும்புல் கருஞ்சடை
தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி
தாணு தெற்பை சிறுபீளை சாடிணை
வெங்கோரை பொருதலை வெள்ளமே
என்ற பாடல் என்னென்ன புல் இருக்குமிடத்தில் நீர் இருக்கும் என்பதைச் சொல்கிறது.