ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லது என்று நீண்ட நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதனை ஏற்றுச் சிலர் குடிக்கவும் செய்கின்றனர்.
பாலிஃபினால் என்ற வேதிப்பொருள் ஒயினில் இருப்பதால் அது நோய் எதிர்பாற்றலைத் தருகிறது. எனவே உடலுக்கு நல்லது என்பது அவர்களின் கருத்து.
ஆனால், பாலிஃபினால் என்ற வேதிப் பொருளுடன் கலந்துள்ள ஆல்கஹால் உடலுக்கு தீங்கு செய்யக் கூடியது. நல்லது தேடும் போது கெட்டதும் சேர்ந்து வந்தால் அந்த நல்லதும் கெட்டுப்போகும். குறிப்பாகக் கல்லீரலை அது அழித்துவிடும்.
எனவே, பாலிஃபினால் உடலுக்குத் தேவை என்றால், பப்பாளிப்பழமும், கத்தரிக்காயும் தேவையான அளவு சாப்பிட்டால் அது கிடைத்துவிடும். இந்த இரண்டினையும் பாலிஃபினால் உள்ளது.
மாறாக, ஒயின் சாப்பிட்டால் அதிலுள்ள ஆல்ஹால் குடிக்கின்றவர்களின் மரபணு வழியாக சென்று அவருக்கு பிறக்கும் குழந்தையின் கல்லீரலைப் பாதிக்கும். எனவே, நமக்குத் தேவையானவற்றை காய்கறி, கீரை, பழம், பருப்புகளிலிருந்து இயற்கையாய் பெறுவதே சிக்கனத்திற்கும் உடல் நலத்திற்கும் உகந்தது.