கருநாடக சட்டசபையிலிருந்து 11 பாரதிய ஜனதா மற்றும் அய்ந்து சுயேச்சை அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மே 13 அன்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தனது அரசின் மெஜாரிட்டியை குடியரசுத் தலைவரின் முன்பு 114 எம்.எல்.ஏக்களுடன் சென்று எடியூரப்பா மே 17 அன்று நிரூபித்தார்.
செக்ஸ் புகாரில் சிக்கிய சர்வதேச நிதி நிறுவனத் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் மே 15 அன்று கைது செய்யப்பட்டார். எலக்ட்ரானிக் டேக், வீட்டுக்காவல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் மே 20 இல் ஜாமின் வழங்கப்பட்டது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு. கழகம் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஜெயலலிதா மே 16 அன்று முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர். காங், _ அ.தி.மு. கூட்டணி வெற்றி பெற்று ரங்கசாமி மே 16 அன்று முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணிக் கட்சி ஆட்சி அமைத்து உம்மன் சாண்டி மே 18 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அசாமில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைத்து மூன்றாவது முறையாக தருண் கோகாய் திதாபோர் முதல்வராக மே 18 அன்று பொறுப்பை ஏற்றுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த ஏமன் பிரச்சினையில், அதிபர் அலி அப்துல்லா சலேயும் எதிர்க்கட்சியினரும் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (ஜி.சி.சி) முன்வைத்த ஒப்பந்தத்தில் மே 18 அன்று கையெழுத்திட்டனர்.
மத்திய இரயில்வே அமைச்சர் பதவியை மே 19 அன்று மம்தா பானர்ஜி ராஜினாமா செய்தார்.
ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துவதற்கு, மத்திய அமைச்சரவை மே 19 இல் ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், கடந்த 34 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சியை, திரிணாமுல் காங்கிரஸ் முறியடித்து மம்தா பானர்ஜி மே 20 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கருநாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கருநாடக ஆளுநரின் சிபாரிசை மத்திய அரசு மே 22 அன்று நிராகரித்தது.
தமிழக அமைச்சரவையில் சுற்றுச் சூழல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற மரியம் பிச்சை மே 23 திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.