மக்கள் மனசு

ஜூலை 01-15

உண்மை வாசகர்களிடம் முகநூல் வாயிலாகக் கேட்டதற்கு அளித்த பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

நெய்வேலி தியாகராசன்

கற்காலத்திற்கே இழுத்துச் செல்லும் காட்டுவிலங்காண்டிச் செயல்.

ம. சுப்பிரமணியன்

மத்திய அரசு ராமர் கோயில் கட்டுவோம் என்கிறது. இதனால் இந்து முஸ்லிம் கலகம் வரும். யோகாவை முசுலிமும் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது.

முசுலிமும் யோகாவில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பதினால் எதிர்க்கின்றனர். மாட்டு மாமிசம் சாப்பிடுவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்!

மத நல்லிணக்கத்தைக் கெடுத்திடும் மதவாதிகளின் செயல் சரியே அல்ல!

க.வடிவேலன்

மதம் மதம் என மதம் பிடித்த யானை போன்று மதம் பிடித்து அலையும் மனிதனே நீ மனிதனல்ல மாக்களே.

முரு.கோசலை

மனிதனாக வாழவும், தெரியாதவர்களுக்கு சொல்லித்தரவும் இந்த மதவாதிகள் முயற்சி செய்யவில்லை. மக்கள் தொகையை குறைப்பதற்குத்தான் இவர்களின் இயக்கம் வழி காட்டுகிறது. என்னதான் நீ முயற்சி செய்தாலும் மனிதநேயம் இல்லாத எந்தக் கொள்கையும், முடிவில் அழிவைத்தான் தருமே தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை, வாழ்வின் நேரமும், முக்கிய கடமைகளும் வீணாகப் போவது உறுதி.

நீ எந்த மதக்காரன் என்பதைவிட, உலக மக்களுக்கு என்ன சாதனை செய்தாய் என்பதுதான் தற்போது தேவை.

வினோத்

எப்பொழுதும் மதம் மதம் என்று சுற்றித் திரியும் மதம்பிடித்த மத யானைகளை மிருகங்களோடு காட்டில் கொண்டு விடவேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *