Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நம்மால் முடியும்!

தகுதியும் திறமையும் தனக்கே உரியது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆதிக்கம் செலுத்திய ஆரிய பார்ப்பனர்கள் அதிர்ச்சியடையும் வகையில் பார்ப்பனர் அல்லாதோர் கல்விச் சாதனை நாளுக்கு நாள் உச்சம் பெற்று மெச்சத்தக்கதாய் வளர்ந்து வருகிறது.

எடுத்துக்காட்டாக மருத்துவப் படிப்பில் நமது மாணவர்களின் சாதனையைப் பாருங்கள்.

200/200 எடுத்த 17 மாணவர்களில் 13 மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மாணவர்கள்.

ஒருவர் மிகப் பிற்படுத்தப்பட்டோர்; ஒருவர் இஸ்லாமியர். ஒருவர் மட்டுமே உயர் ஜாதியைச் சேர்ந்தவர்.

மதம், ஜாதி மறுத்த கொள்கைக் குடும்பத்து மாணவர் திராவிடன் 17இல் ஒருவர். அவருக்கு நமது தனிப்பட்ட வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

199.75% எடுத்தவர்கள் 37 பேர். இதில் பிற்பட்டோர் 25 பேர், மிகப் பிற்பட்டோர் 7 பேர், இஸ்லாமியர் 1, தாழ்த்தப்பட்டோர் 3, முற்பட்டோர் 1.

ஆக, முற்பட்டோரை முந்தி தாழ்த்தப்பட்டோர் வந்துள்ளது சமுதாயப் புரட்சியின் அடையாளம்! பாராட்டி வரவேற்க வேண்டிய சாதனை!

அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் விரும்பிய மாற்றம் வரத் தொடங்கிவிட்டது. விழிப்போடு உழைத்து பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மேலெழ வாழ்த்துக்கள். பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இதை ஓர் உந்து சக்தியாக உள்ளத்தில் கொள்ள வேண்டும்!