Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஏடாகூடம் ஏதுசாமி

ஆட்சி பறிபோயிடக்கூடாதுன்னு, டின்டின்னா நெய்யை ஊத்தி, பட்டுத்துணிகளை எரிச்சி பெரிய பெரிய யாகம்…. அளவுக்கு அதிகமா சேர்த்தா சொத்தை கோயில்களுக்குக்  காணிக்கை….

இந்த 21ஆம் நூற்றாண்டில நிர்வாண பூஜையெல்லாம் நடத்திய ஏடியூரப்பாவுக்கு சிக்கல் தீர்ந்தபாடில்லையே… இப்பவாவது அவருக்கு ஆன்மீகப் பித்தம் தெளியுமா….?

கிறிஸ்துவ ஆலயத்தில் விளக்குமார் காணிக்கை: பக்தர்கள் நூதன வழிபாடு! – செய்தி

இது என்ன மெத்தடுனே தெரியல சார்…. பக்தர்கள், தான் வேண்டிக்கிட்ட காரியம் நிறைவேறிட்டா விளக்குமாரை காணிக்கையாக செலுத்துவாங்க…. காரியம் நிறைவேற லைன்னா, விளக்குமாரை என்ன பண்ணுவாங்க…?

எனக்கு எதிராக பொய் வாக்குமூலம் அளிக்க, நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ. 20 கோடி பேரம் பேசப்பட்டது!

– நித்தியானந்தா

அப்ப, அதைவிட அதிகமா கொடுத்து, ரஞ்சிதாவை அவர் பக்கம் இழுத்துட்டாரோ….?

– படமும் கருத்தும்: கர்ணா