செய்திக்கூடை

ஜூன் 01-15
  • மும்பையில் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் கட்டிடம் உள்ள இடம் அரசுக்குச் சொந்தமானது என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
  • கவுரவ கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
  • லிபியா நாட்டிலிருந்து இத்தாலிக்குச் சென்ற கப்பல் உடைந்ததால் அதிலிருந்த 600 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
  • சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொலை தொடர்பாக அய்க்கிய நாடுகள் விசாரணை நடத்த வேண்டும் என அவரது மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • மது அருந்திவிட்டு ரயில் இன்ஜினை இயக்கினால், தானாகவே நின்றுவிடுவதுடன், கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்துவிடும் ஆல்கோலாக் கருவி இங்கிலாந்திலுள்ள ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்து குடும்பத்தில் பிறந்த திருமணம் ஆகாத பெண்ணுக்கும் பூர்வீகச் சொத்தில் சம பங்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • அல் கொய்தா இயக்கத் தலைவர் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதால், அதன் புதிய தலைவராக எகிப்து நாட்டைச் சேர்ந்த சாயிப்அல் ஆதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன் மீதான புகாரை விசாரிக்கும் மூவர் குழுவுக்கு உதவி செய்ய, மனித நல அமைப்புகள் உதவுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
  • செக்ஸ் புகாரில் சிக்கிய சர்வதேச நிதி அமைப்பின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, துணை இயக்குநர் ஜான் லிப்ஸ்கி தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • 2 சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்தக் கல்வி ஆண்டில் அமல்படுத்துவது இல்லை என்றும், பள்ளிகளை ஜூன் 15 ஆம் தேதி திறப்பது என்றும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஹார்ட் அட்டாக் வந்தவுடன், செல்பேசியில் பதிவு செய்திருக்கும் தகவலை தானாகவே மருத்துவருக்கு அனுப்பும் மினியேச்சர் ஈ.சி.ஜி. மிஷின் பொருத்தப்பட்ட செல்பேசியினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *