மகனின் ஓரினச் சேர்க்கைக்கு ஆண் தேடும் பார்ப்பனத் தாய்!
கலாச்சாரம் காக்கும் லட்சணம் இதுதானா?
மும்பை மே 22_ மும்பையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக நடத்தப்படும் பத்திரிகை ஒன்றில் தனது மகனுக்காக தகுந்த மணமகன் வேண்டும் என்று ஒரு பார்ப்பனத்தாய் விளம்பரம் செய்துள்ளார்.
ஹரீஸ் அய்யர் என்ற 36 வயதுடைய மும்பை பார்ப்பனப் பையனுக்கு அவனுடைய இனத்தில் பெண் கிடைக்கவில்லை. நீண்ட நாள்களாக தேடிய பிறகு சலித்துப்போன அந்தப் பார்ப்பனத்தாய் தனது மகனுடன் கலந்து ஆலோசித்து ஒரு திடகாத்திரமான ஆணை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவனும் தலையை ஆட்டிவிட, உடனே இந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரே ஓரினச் சேர்க்கையாளருக்கான இதழில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஓரினச்சேர்க்கை மணமகன் தேவை; வயது 25 முதல் 40 வயதுவரை; எனது மகனின் தகுதி _ வளர்ப்புப் பிராணிப் பிரியர், சைவ உணவுப் பழக்கம் உள்ளவர். ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி யாற்றுகிறார். நல்ல சம்பாத்தியம், என்று குறிப்பிட்டு முக்கியமாக ஜாதிபற்றிக் கவலையில்லை என்று தெரிவித்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட்டு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டும் இருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியான இந்த விளம்பரத்திற்கு இணையதளம் மூலம் ஆயிரக் கணக்கான விருப்ப மின்னஞ்சல் சென்றுள்ளதாம். பொதுவாக இந்தியாவில் தற்போது கலாச்சாரக் காவலர்கள் ஆட்சியில் இருக்கும்போது பூணூல் அணிந்த பார்ப்பானுக்கு அவனது தாயே ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதியளித்து இணையும் தேட ஆரம்பித்துவிட்டார். இந்தியாவில் இருந்தும் அயல் நாடுகளிலும் இருந்தும் நிறைய அழைப்புகள் வருவதாகவும், எனது மகன்தான் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்வான் என்றார். மேலும் திருமணம் முழுக்க முழுக்க இந்து முறைப்படி சாஸ்திர சாம்பிரதாயங் களுடன் நடைபெறும் என்றார்.
கலாச்சாரம் காக்கும் காவலர்களே!
இதற்கு என்னச் செய்யப் போகிறீர்கள்?