இந்தியா எங்கும் “தமிழ்” என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்
ஆந்திராவில் – 29 ஊர்கள்
அருணாசலப் பிரதேசத்தில் – 11 ஊர்கள்
அசாமில் – 39 ஊர்கள்
பீகாரில் – 53 ஊர்கள்
குஜராத்தில் – 5 ஊர்கள்
கோவாவில் – 5 ஊர்கள்
அரியானாவில் – 3 ஊர்கள்
இமாசலப்பிரதேசத்தில் – 34 ஊர்கள்
கர்நாடகாவில் – 24 ஊர்கள்
மகாராட்டிரத்தில் – 120 ஊர்கள்
மேகாலயாவில் – 5 ஊர்கள்
மணிப்பூரில் – 14 ஊர்கள்
மத்தியப்பிரதேசத்தில் – 60 ஊர்கள்
தமிழ் என்று தொடங்கும் ஊர்களுக்கு அருகே பழனி, தேக்கடி, தேனி, போடி என மதுரை மாவட்டத்தில் உள்ள ஊர்கள் உள்ளன.
நாகாலாந்தல் 4, ஒரிசாவில் 84, பஞ்சாபில் 4, இராசஸ்தானில் 26, தமிழ்நாட்டில் 10, உத்திரபிரதேசத்தில் 64, மேற்கு வங்கத்தில் 24 உள்ளன.
இந்தியா முழுமையிலும் தமிழ் என்று தொடங்கும் ஊர்கள் 612 உள்ளன.
சிந்துவிலும் காவிரியிலும் ஒரே நாகரிகம்!
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் 2006 பிப்ரவரியில் இரு புதிய கற்காலக் கைக்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றுள் ஒன்றில் கி.மு.2000 கி.மு.1500ஆண்டுகளுக்கு இடைப்பட்ட அரப்பா மொகஞ்சதாரோ கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தெரிவிக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் சிந்துசமவெளி நாகரிகமும் தொல்தமிழர் நாகரிகமும் திராவிடர் நாகரிகமும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டுப் புதிய கற்கால மக்கள் அரப்பா மக்களின் திராவிட மொழியைப் பயன்படுத்தினர் என்பது இதன்வழி தெரிகிறது. இது தமிழ்நாட்டில் புதிய கற்கால மக்கள் தமிழ்ப் பேசியதற்கான முதல் சான்று.
ஆதாரம்: (உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் – ப.சண்முகசுந்தரம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம்)
குறிப்பு: இந்த இரண்டு சான்றுகளும் இந்தியா தமிழர் (திராவிடர்) மண் என்பதை உறுதி செய்கின்றன.