கடவுளைக் கற்பிக்காதவன் காட்டுமிராண்டி

மே 16-31

சமுதாயப் புரட்சி இயக்கமாக, ஜாதி ஒழிப்பு, சுயமரியாதைக் கொள்கைகளை முன்னிறுத்தி தந்தை பெரியார் மேற்கொண்ட பிரச்சாரம், அவருடைய கடவுள் மறுப்புக் கருத்துகளோடு தமிழர்களிடம் வெகுவாகச் சென்று சேர்ந்தது.

1967இல் புகழ்பெற்ற கடவுள் மறுப்பு வாசகத்தை தந்தை பெரியார் விடயபுரத்தில் வெளியிட்டார்.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்ற அந்த வாசகத்தை எதிர்ப்பதாகக் கூறி அதனையே உல்டா செய்து சிலர் கடவுள் உண்டு என்ற வாசகத்தை வெளியிட்டுப் பார்த்தனர். ஆனால், அப்படி வெகுஎளிதில் உல்டா செய்வதற்கோ பதில் சொல்வதற்கோ பெரியாரின் வாசகங்கள் வெறும் சொற்கள் அல்ல. அவை தத்துவார்த்தச் சுருக்கம்.

அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தது. அதற்கான விளக்கத்தை கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம் என்ற தலைப்பில் பெரியார் எழுதியுள்ளார்.

இதற்கு மறுப்பாக அப்போது சிலர்  கடவுளைக் கற்பிக்காதவன் முட்டாள் என்று எழுதினார்கள். அதைக் கண்டு நகைத்த தந்தை பெரியார், கடவுளைக் கற்பிக்காதவன் முட்டாள் என்றால் கடவுள் கற்பிக்கப்பட்டது என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாகத்தானே பொருள் என்று எள்ளி நகையாடினார்.

40 ஆண்டுகள் கடந்த பின்னும் கொஞ்சமும் வளராமல் அதே நிலையில்தான் இருக்கிறார்கள் மதவாதிகள். தந்தை பெரியார் சிலைக்குக் கீழே பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்கப்போவதாக புதிதாகக் கிளம்பியுள்ள கா(லி)விகள்.

கடவுள் உண்டு! கடவுள் உண்டு! கடவுளை வணங்காதவன் காட்டுமிராண்டி!!
கடவுளை பரப்பாதவன் அயோக்கியன்!!
கடவுளை கற்பிக்காதவன் முட்டாள்!!

பக்தி வந்தால் புத்தி வரும்
புத்தி வந்தால் சக்தி வரும்

என்று போட்டிருக்கிறார்கள். இப்போதும்-கூட கடவுள் கற்பிக்கப்பட்டது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபற்றி முகநூலில் வெளிவந்த கருத்துகள்: கடவுளைக் கற்பிக்காதவன் முட்டாள் என்கிறார்.

எந்தக் கடவுளை??????…..

பூமியை மனிதன் புணர்ந்து பிறந்த மாதிரி கடவுளையா?
ஆணும், ஆணும் சேர்ந்து பெத்த மாதிரி கடவுளையா?
சரயு நதியில் தற்கொலை செய்து கொண்ட ராமன் மாதிரியான கடவுளையா?

ப்ரோப்பஸ் பண்ணினதுக்கு மார்பையும், மூக்கையும் அறுத்த லட்சுமணன் மாதிரி கடவுளையா?

கோபியர்கள் என்னும் அடுத்தவர் மனைவியுடன் சல்லாபித்துத் திரிந்த, குளிக்கும் பெண்களின் உடைகளைத் திருடிய கிருஷ்ணன் மாதிரியான கடவுளையா?
எந்தக் கடவுளை?

முதல்ல இது மாதிரி கடவுளைக் கற்பிச்சவனை நல்ல மெண்டல் ஹாஸ்பிடல்ல சேருங்க… மனநோய் பிடிச்சிருக்கப் போகுது…

வந்துட்டானுக கடவுளைக் கற்பிக்க…

– பா.ம. மகிழ்நன்

* * *

இப்படி மாட்டிக்கிட்டியே கட்டைபுள்ளை.

1. கடவுளை வணங்காதவன் காட்டுமிராண்டி. அப்படி என்றால், கடவுளை வணங்குகிறவன் நாகரிகமானவன் என்கிறார் அர்ஜுன் சம்பத்.

2. கடவுளைப் பரப்பாதவன் அயோக்கியன், அப்படி என்றால், கடவுளைப் பரப்புகிறவன் யோக்கியன் என்கிறார் அர்ஜுன் சம்பத்.

3.  கடவுளைக் கற்பிக்காதவன் முட்டாள். அப்படி என்றால், கடவுளைக் கற்பிப்பவன் அறிவாளி என்கிறார் அர்ஜுன் சம்பத்.

இதே போன்ற ஒரு வாசகத்தை தந்தை பெரியார், கடவுள் மறுப்புச் சொன்னபோது, பெரியார் சொன்னாராம்:   கடவுள் கற்பிக்கப்பட்டது என்று ஒத்துக் கொண்டானே, அது போதும் நமக்கு.   அவன் அறிவாளியா இல்லை முட்டாளா என்பதைப் பிறகு விவாதித்து முடிவு செய்யலாம் என்றாராம் பெரியார்.

ஆக, இந்த மாதிரி முட்டாள்கள் சொல்லுவார்கள் என்று தெரிந்தே, முன்கூட்டியே, பதிலையும் தந்துவிட்டுப் போயிருக்கிறார் தொலைநோக்காளர் பெரியார். யாருகிட்டே, எங்க அய்யாகிட்டே, இந்த பப்பு எல்லாம்  வேகாது என்று கூறியுள்ளார்.

– குடந்தை கருணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *