டீ கிளாஸ்

மே 16-31

டீ கிளாஸ்

கதை, வசனம், தயாரிப்பு

மு.க.பழனிக்குமார்
செல்பேசி: 99445 33400

இயக்கம்: தினகரன்

தன் குடும்பச் சூழ்நிலை காரணமாக படிக்க முடியாத சிறுவன் இளங்கோ டீக்கடையில் வேலை செய்கிறான். அவனுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.

தான் வேலை செய்யும் டீக்கடை வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்களைப் பார்த்து தான் படிக்க முடியவில்லையே என்று ஏக்கமும், வருத்தமும் கொள்கிறான்.

ஒரு சூழலில் பள்ளி மாணவர்களுடன் நட்புடன் பழகுகிற வாய்ப்புக் கிடைக்கிறது. பள்ளி மாணவர்களும் இளங்கோவுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர்.

ஒரு நாள் டீக்கடை முதலாளிக்கு இந்த விஷயம் தெரியவர, இளங்கோவின் ஆர்வம் என்னவாகியிருக்கும்? என்பதை நேர்மறையாகச் சொல்கிறது இக்குறும்படம். நல்ல முயற்சி!

படத்தை இந்த லிங்கில் பார்க்கலாம் : https://www.youtube.com/watch?v=XGFG9GlPTSo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *