நூல்
நூல்: ஒ.தணிகாசலம் செட்டியார் (சமுதாய நீதியின் மகத்தான தலைவர்) ஆசிரியர்: பேராசிரியர் மா.இளஞ்செழியன் வெளியீடு: டாக்டர் ஒ.சோமசுந்தரம், பு.எண்: 17, 23-வது குறுக்குத் தெரு, பெசண்ட் நகர், சென்னை-600 090. விலை: ரூ. 75/- பக்கங்கள்: 100.
நீதிக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான திவான் பகதூர் ஒ.தணிகாசலம் (செட்டியார்) அவர்கள் சமூக நீதிக்காகவும்,
அரசாங்கப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் எல்லாச் சமுதாயத்தினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காகவும் இடைவிடாது போர் நிகழ்த்திக் கொண்டிருந்தவர் என்பதனை இந்த நூல் வரலாற்றுப் பக்கங்களாக எடுத்துக் கூறுகிறது.
தென்னிந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட உண்மையான சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்களின் வரிசையில் பிரபலமான அரசியல் தலைவராக ஒ.தணிகாசலம் திகழ்ந்துள்ளார். நல்ல சொற்பொழிவாளர், கடமை தவறாத வழக்குரைஞர் என என்றும் அழியாத பெயரைக் கொண்டவராகத் திகழ்ந்துள்ளார்.