Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கருப்புச்’சாட்டை ‘

தாலி பிரச்சினையில் திராவிடர் கழகத்துக்கும் பெரியாருக்கும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதாகக் கருதிக் கொண்ட காவிக்கும்பல், கருப்புச்சட்டையைக் கொளுத்துவோம்… கழற்றுவோம்… என்றெல்லாம் கூக்குரலிட, இந்தப் பாசிசத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்வோம்; ஏப்ரல் 22-ஆம் தேதி காலையில் அனைவரும் ஒரே நேரத்தில் கருப்புச்சட்டை அணிந்து முகநூலில் படத்தை மாற்றுங்கள் என்று எழுந்தது தமிழ் இளைஞர்களின் அறிவிப்பு. ஒரே நாள் தான்… அடேயப்பா…. 25000க்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக கருப்புச் சட்டை அணிந்து முகநூலில் படத்தை மாற்றி பாசிசத்திற்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

#Black_against_Saffron  என்ற ஹேஷ் டேக் ஒட்டுமொத்த இந்திய இணைய ஆய்வாளர் களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. காவிகளைக் கலங்கவைத்த இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மனப்போக்கை அண்மையில் படம்பிடித்துக்காட்டிய மிகப்பெரும் சான்று.