மிசோராம் ஆளுநர் அஜீஸ் குரேஷி மார்ச் 28 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கன்னடம்தான் பயிற்றுமொழி, 10ஆம் வகுப்புவரை கன்னடம் கட்டாயம் மொழிப் பாடம் என்ற சட்டத்திருத்தத்தை கர்நாடக அரசு ஏப்ரல் 2 அன்று நிறைவேற்றியுள்ளது.
போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள்மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுவதற்கான அதிகாரத்தை உரிமையியல் நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
நைஜீரிய நாட்டின் அதிபர் தேர்தலில் முகமது புகாரி வெற்றி பெற்றுள்ளார்.